Remove ads
இராசத்தானில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
துங்கர்பூர் மாவட்டம் (Dungarpur District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் துங்கர்பூர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் உதய்பூர் கோட்டத்தில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டத்தின் பகுதிகளை துங்கர்பூர் சமஸ்தானம் ஆட்சி செய்தது.
துங்கர்பூர் பகுதியை கி பி 12-ஆம் நூற்றாண்டில் இராஜபுத்திரர்களால் வெல்லப்படும் வரை, கி மு 4000 ஆண்டிற்கு முன்னர் துங்கர்பூர் பகுதியில் பில் பழங்குடி மக்களால் நிறைந்திருக்கப் பெற்றிருந்தது.[1] மேவார் இராஜபுத்திர மன்னர் சமந்து சிங் என்பவர் டுங்கர்பூர் அரசை 1197-இல் நிறுவினார்.[2] பில் மக்கள் இப்பகுதியில் பெரும்பாண்மை மக்களாகவே உள்ளனர்.[3]
இராஜஸ்தான் மாநிலத்தின் தென் பகுதியில், குஜராத் மாநில எல்லையை ஒட்டி அமைந்த டுங்கர்பூர் மாவட்டத்தின் வடக்கிலும், வடகிழக்கிலும் உதய்பூர் மாவட்டம், தென்கிழக்கில் பான்ஸ்வாரா மாவட்டம், தெற்கில் குஜராத் மாநிலத்தின் தகோத் மாவட்டம், தென்மேற்கில் பஞ்சமகால் மாவட்டம், மேற்கில் சபர்கந்தா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
டுங்கர்பூர் மாவட்டம் அஸ்பூர், டுங்கர்பூர், சக்வாரா, சிமல்வாரா, பிச்சிவாரா என ஐந்து வருவாய் வட்டங்களையும்;[4][5] டுங்கர்பூர் மற்றும் சக்வாரா என இரண்டு நகராட்சி மன்றங்களையும்; 976 கிராமங்களையும் கொண்டுள்ளது.[6]
இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது.[7]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,388,552 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 93.61% மக்களும்; நகரப்புறங்களில் 6.39% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.36% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 696,532 ஆண்களும்; 692,020 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 994 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 3,770 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 368 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 59.46 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.88 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 46.16 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 242,239 ஆக உள்ளது. [8]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,340,065 (96.51 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 28,662 (2.06 %) ஆகவும்; சமண சமய ; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.