Remove ads
From Wikipedia, the free encyclopedia
கார்வால் நாடு (Garhwal Kingdom or Tehri Garhwal) (இந்தி: गढ़वाल राज्य) இந்தியாவின் வடக்கில் இமயமலை பகுதியில், சிவாலிக் மலைத் தொடரில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த கார்வால் இராச்சியத்தை இராஜபுத்திர குலத்தவர்கள் ஆண்ட அரசாகும். கார்வால் நாடு பொ.ஊ. 888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
கார்வால் அரசு தெக்ரி கார்வால் கார்வால் நாடு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ. 888–1949 | |||||||||
கொடி | |||||||||
தலைநகரம் | தேவல்கார் பொ.ஊ. 1500-1519 ஸ்ரீநகர், உத்தரகண்ட் 1519-1804 தெஹ்ரி 1815-1862 பிரதாப்நகர் 1862-1890 கீர்த்திநகர் 1890-1925 நரேந்திரநகர் 1925-1949 | ||||||||
பேசப்படும் மொழிகள் | கார்வாலி சமஸ்கிருதம் இந்தி | ||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி சுதேச சமஸ்தானம் (1815–1949) | ||||||||
கார்வால் மஹாராஜா | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | பொ.ஊ. 888 | ||||||||
• முடிவு | 1949 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | உத்தரகண்ட், இந்தியா |
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானமாக 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசுடன் இணைந்தது.
கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் உத்தரகாசி மாவட்டம் எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது.
மால்வாவின் இளவரசன் கணக்பால் இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு சென்ற போது, அங்கிருந்த சந்தரப்பூர் கார்கியின் மலையரசன் பானுபிரதாப்பின் மகளை திருமணம் செய்து கொண்டதன் மூலம் சந்திரப்பூர் கார்கி பகுதியின் மன்னரானார். பின்னர் 52 குறுநில மன்னர்களை வென்று கார்வால் இராச்சியத்தை பொ.ஊ. 823-இல் நிறுவினார்.[1]
பொ.ஊ. 1901-இல் கார்வால் இராச்சியம் 4180 சதுர கிலோ மீட்டர் பரப்பள்வில் 2,68,885 மக்கள் தொகையுடன் விளங்கியது. 1815-முதல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு கப்பல் செலுத்தி நாட்டை ஆண்டனர். பின்னர் 1859 முதல் 1947 முடிய பிரித்ததானியாவின் இந்திய அரசில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-ஆம் ஆண்டில் கார்வால் நாடு இந்திய அரசில் இணைந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.