இமயமலையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடர் From Wikipedia, the free encyclopedia
சிவாலிக் மலை (Sivalik hills) இமயமலையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடர் ஆகும். இது பழங்காலத்தில் மனாக் பிரபாத் எனும் பெயரால் அழைக்கப்பட்டது. சிவாலிக் என்பதற்கு சிவனின் கூரை (tresses of Shiva) என்று பொருள்.[1] இம்மலைத்தொடரானது சிந்து ஆற்றுப் பகுதியிலிருந்து பிரம்மபுத்திரா நதி வரை 2,400 கிலோமீட்டர்கள் நீளத்திற்குப் பரவியுள்ளது. இம்மலைத்தொடரினிடையே அசாம் பகுதியில் தீஸ்டாவுக்கும் ராய்ராக்கும் இடையே 90 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு இடைவெளி உள்ளது. இம்மலைத் தொடரானது 10 முதல் 50 கிலோமீட்டர்கள் அகலம் உடையது. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர்கள் முதல் 2,000 மீட்டர்கள் உயரமுடையது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.