கலட் கானரசு
1512-1955 பலுசிஸ்தான் அரசு From Wikipedia, the free encyclopedia
கலட் கானரசு என்பது 1512 முதல் 1955 ஆண்டு வரை நீடித்திருந்த ஒரு பலூச் கானரசு[1] ஆகும். இது தற்போதைய பலுசிஸ்தான் மாகாணத்தை மையமாகக்கொண்டு அமைந்திருந்தது. அதற்கு முன்னர் இம்மக்கள் முகலாயப் பேரரசர் அக்பரின் குடிமக்களாக இருந்தனர்.[2][3] அகமத்சாய் கான் 1839 ஆம் ஆண்டு வரை இந்த அரசை சுதந்திரமாக ஆண்டு வந்தார். பிறகு பிரித்தானிய இந்தியாவுடன் ஏற்பட்ட கூட்டணிப்படி இந்த அரசானது சுயாட்சி கொண்ட அரசாக மாறியது. 1876 ஆம் ஆண்டு கலட் கான் பலூச் சர்தார்களுக்கு இடையில் கையொப்பமிடப்பட்ட மசுதுங் ஒப்பந்தத்தின்படி கலட் அரசானது பலுசிஸ்தான் அமைப்பின் ஒரு பகுதியானது.[4] . இந்த இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 19 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 12 ஆகஸ்ட் 1947 முதல் 27 மார்ச் 1948 வரை குறுகிய காலத்திற்கு இது சுதந்திரமான அரசாக இருந்தது. பலூச் மக்களின் அரசியல் மையமான இக்கானரசு காலனியாதிக்க காலத்தில் நீடிக்க இயலாமல் போனது. பலூச் மொழியும் இக்காலத்தில் நெறிமுறைப்படுத்தப்படவில்லை.[5]



மேலும் காண்க
உசாத்துணை
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.