வாசிங்டன், டி. சி.
ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
வாசிங்டன், டி. சி. (வாஷிங்டன் டி. சி; Washington, D.C.), முழுப்பெயர் வாசிங்டன், கொலம்பியா மாவட்டம் (Washington, District of Columbia) ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப்பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது. அமெரிக்காவில் பல நகரங்கள் வாசிங்டன் என பெயரிடப்பட்டுள்ளதால் இதனைக் குறிக்க இந்த நகரத்தின் முந்தைய பெயரான கொலம்பியா மாவட்டம் (District Of Columbia) என்பதன் சுருக்க வடிவமாக (DC - டிசி) என்ற ஒட்டுடன் அறியப்படுகிறது. ஜார்ஜ் வாசிங்டன் அவர்களே இந்நகருக்கான நிலத்தை தேர்வு செய்தார்.
கொலம்பியா மாவட்டம் | |
---|---|
அடைபெயர்(கள்): டிசி" | |
குறிக்கோளுரை: Justitia Omnibus (எல்லோருக்கும் நீதி) | |
வாசிங்டன் டிசி அமைவிடம்., மேரிலாந்துக்கும் வர்ஜீனியாவுக்கும் பக்கம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
கூட்டாட்சி மாவட்டம் | கொலம்பியா மாவட்டம் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | ஏட்ரியன் ஃபென்ட்டி (D) |
• டி.சி. அவை | தலைவர்: வின்சென்ட் சி. கிரே (D) |
பரப்பளவு | |
• நகரம் | 177.0 km2 (68.3 sq mi) |
• நிலம் | 159.0 km2 (61.4 sq mi) |
• நீர் | 18.0 km2 (6.9 sq mi) |
ஏற்றம் | 0–125 m (0–410 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 5,88,292 |
• அடர்த்தி | 3,481/km2 (9,015/sq mi) |
• பெருநகர் | 5.30 மில்லியன் |
நேர வலயம் | ஒசநே-5 (EST) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
இணையதளம் | http://www.dc.gov/ |
வாசிங்டன் டி.சி பொட்டாமக் நதியின் கரையில் அமைந்துள்ளது. வர்ஜீனியா & மேரிலாந்து மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட நிலங்களைக் கொண்டு இந்நகரம் அமைக்கப்பட்டது. எனினும் 1847 ல் பொட்டாமக் நதிக்கு தென்புறம் உள்ள வெர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வெர்ஜீனியா மீளப் பெற்றுக்கொண்டது. அவை ஆர்லிங்டன் கவுண்டி & அலெக்சாண்டரியா நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வாசிங்டன் டி.சி மெரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. மேற்கில் வெர்ஜீனியா & கிழக்கு, தெற்கு, வடக்கில் மெரிலாந்து மாநிலம் எல்லையாக உள்ளது.
உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS) போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தலைமையிடங்கள் இங்கு உள்ளன.