![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ed/Tyre_Public_Beach.jpg/640px-Tyre_Public_Beach.jpg&w=640&q=50)
டயர் நகரம்
From Wikipedia, the free encyclopedia
டயர் (Tyre) (அரபு மொழி: صور Ṣūr; போனீசியம்: 𐤑𐤓 Ṣūr; சிரியாக்: ܣܘܪ, எபிரேயம்: צוֹר Tzór; கிரேக்கம்: Τύρος Týros; இலத்தீன்: Tyrus; ஆர்மீனியம்: Տիր Tir; பிரெஞ்சு மொழி: Tyr; லெபனிய பிரான்சு மொழியில் சௌர் (Sour) என்றும் அழைப்பர்.
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ தயர் நகரம், லெபனான் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
டயர்
صور Tyr சௌர் (லெபானிய பிரான்ச்) | |
---|---|
நகரம் | |
![]() டயர் கடற்கரை | |
அடைபெயர்(கள்): சைதா | |
ஆள்கூறுகள்: 33°16′15″N 35°11′46″E | |
நாடு | ![]() |
Governorate | தெற்கு ஆளுநரகம் |
மாவட்டம் | டயர் மாவட்டம் |
நிறுவப்பட்டது. | கிமு 2750 |
பரப்பளவு | |
• நகரம் | 4 km2 (2 sq mi) |
• மாநகரம் | 17 km2 (7 sq mi) |
மக்கள்தொகை | |
• நகரம் | 60,000 |
• பெருநகர் | 1,74,000 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம் (குளிர் காலம்)) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய நேரம் (கோடைக் காலம்)) |
வகை | பண்பாட்டுக் களம் |
வரன்முறை | iii, vi |
தெரியப்பட்டது | உலகப் பாரம்பரியக் களம், ஆண்டு 1984 |
உசாவு எண் | 299 |
State Party | ![]() |
உலகில் பல்லாண்டுகளாக தொடர்ந்து மக்கள் வாழும் நகரங்களில் டயர் நகரமும் ஒன்று. இந்நகரத்தில் கிமு 2750 முதல் தற்போது வரை மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். இந்நகரம் பண்டைய அண்மை கிழக்குப் பகுதியின் வளமான பிறை பிரதேசத்தில் மத்தியதரைக் கடலின் கிழக்குக் கடற்கரையில் தற்கால லெபனான் நாட்டின், அமைந்த டயர் நகரம், டயர் மாவட்டம் மற்றும் தெற்கு ஆளுநகரத்தின் தலைமையிடமாக உள்ளது. 2003-ஆம் கணக்குப்படி, இந்நகரம் 1,17,000 மக்கள்தொகை கொண்டிருந்தது.[1] லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத்திற்கு தெற்கே 80 கிமீ தொலைவில் டயர் நகரம் உள்ளது. இதன் வடக்கில் 40 கிமீ தொலைவில் சிடோன் நகரம் உள்ளது.
டயர் என்பதற்கு பாறை என்பது பொருளாகும்.[2] பண்டைய காலத்தில் இந்நகரம் பாறைகளின் மீது கட்டப்பட்டதால் இதனை டயர் என அழைக்கப்படுகிறது.
லெபனான் நாட்டில் தற்போது ஐந்தாதவது பெரிய நகரம் டயர் ஆகும். மற்ற நகரங்கள் பெய்ரூத், திரிபோலி, அலெய் மற்றும் சிடோன் ஆகும்.[3] இங்கு லெபனான் நாட்டின் பெருந் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாத் துறை முக்கியத் தொழில் ஆகும். இந்நகரத்தில் பண்டைய உரோமானியர்கள் நிறுவிய டயர் நகரம், உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.[4][5]