இலத்தீன்
இத்தாலிக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ-ஐரோப்பிய மொழி / From Wikipedia, the free encyclopedia
இலத்தீன் (Latin) என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற மொழி ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற மொழியாக இருக்கிறது. ஆனால் கத்தோலிக்க மதத்தின் குருவாகிய போப்பாண்டவர் வாழும் வாட்டிகன் நகரத்தின் ஆட்சி மொழிகளுள் இதுவும் ஒன்று ஆகும். இது முதலில் இத்தாலி தீபகற்பத்தில் உள்ள உரோம் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது.[2]
இலத்தீன் | |
---|---|
ˈlɪŋɡʷa laˈtiːna | |
கொலோசியத்தில் (Colosseum) இலத்தீன் கல்வெட்டு எழுத்துக்கள் | |
உச்சரிப்பு | /laˈtiːna/ |
நாடு(கள்) | வாட்டிக்கன் நகரம் |
Extinct | பொதுமக்கள் இலத்தீன் எனப்படும் பிற்கால இலத்தீன், மாறுபட்டும், வளர்ச்சியடைந்தும், கி.பி 9 ஆம் நூற்றாண்டில் பல்வேறு உரோமானிய மொழிகளாக உருப்பெற்றது. |
இந்தோ-ஐரோப்பியம்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | வத்திக்கான் நகர் அரசுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அன்றாடப் பேச்சு வழக்கில் இல்லை |
Regulated by | Opus Fundatum Latinitas உரோமன் கத்தோலிக்க திருச்சபை[1] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | la |
ISO 639-2 | lat |
ISO 639-3 | lat |
கி.மு. (சிர்கா ஆண்டு) 117ல் உரோமானிய பேரரசின் மிகப்பெரிய அளவைக் குறிக்கும் வரைபடம். - இலத்தீன் மொழி பேசுபவர்களால் ஆளப்பட்ட வாழும் பகுதி இருண்ட சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. - பேரரசுக்குள் இலத்தீன் தவிர பல மொழிகளும் பேசப்பட்டன. | |
ஐரோப்பாவில் இலத்தீன் மொழியின் நவீன வழித்தோன்றல்களான உரோமானிய மொழிகளின் வரம்பு. |
உரோமானியப் பேரரசின் காலத்தில், ஆட்சி மொழியாகவும், கிறித்துவ மத வழிபாடுகளில், முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில், கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 ஆண்டுகளில், இடைபர் ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத எற்றசுக்கன் (Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய கெலிடிக்குமொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த கிரேக்க மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது.
சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற செம்மொழியாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் நெடுங்கணக்கு அகரவரிசையானது எற்றசுக்கன் மொழி மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100இல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்களாக உருக்கொண்டது. இன்று ஆங்கிலம், செருமன், பிரெஞ்சு ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
இன்று, பல மாணவர்கள், அறிஞர்கள் கத்தோலிக்க குருமார்கள் மற்றும் உறுப்பினர்கள் பேசும் இலத்தீன் ஒரு சரளமான மொழியாகும். அது ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, பட்டப் படிப்புநிலை, ஆய்வுநிலை, என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி உள்ளது.[3][4]