எபிரேயம்
From Wikipedia, the free encyclopedia
எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) (/ˈhiːbruː/; עִבְרִית, Ivrit [ʔivˈʁit] (கேட்கⓘ) (அ) [ʕivˈɾit] (கேட்கⓘ)) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமித்திய மொழியாகும். இது 9 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது.[5][6] கி.மு. 10ஆம் நூற்றாண்டில் பண்டைய எபிரேயம் பற்றிய குறிப்புகள் அறியப்படுகின்றன.[7] எபிரேயம் இசுரேல் நாட்டின் அரபுடன் சேர்த்து ஆட்சி மொழியாக விளங்குகிறது.
எபிரேயம் | |
---|---|
עברית, இவ்ரித் | |
சாக்கடல் கும்ரானில் கண்டறியப்பட்ட பண்டைய எபிரேயச்சுவடியின் கிழிந்த பகுதி | |
உச்சரிப்பு | [(ʔ)ivˈʁit] – [(ʔ)ivˈɾit][1] |
நாடு(கள்) | இசுரேல் |
பிராந்தியம் | இசுரேல் தேசம் |
இனம் | இசுரயேலர்; யூதர்கள் மற்றும் சமாரியர்கள் |
Extinct | கி.பி.586ல் வழக்கொழிந்த பண்டைய எபிரேயம் , யூத மதத்தின் வழிபாட்டு மொழியாக இருக்கிறது.[2] |
ஆசிய-ஆப்பிரிக்க மொழிக்குடும்பம்
| |
ஆரம்ப வடிவம் | விவிலிய எபிரேயம்
|
Standard forms | |
எபிரேய அரிச்சுவடி பண்டைய எபிரேய அரிச்சுவடி (பண்டைய விவிலிய எபிரேய அரிச்சுவடி) அராமைப்பேர்ரசு அரிச்சுவடி (மத்திய விவிலிய எபிரேய அரிச்சுவடி) | |
கையெழுத்து வடிவம் | Signed Hebrew (oral Hebrew accompanied by sign)[3] |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | இசுரேல் (as தற்கால எபிரேயம்) |
Regulated by | எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் האקדמיה ללשון העברית (HaAkademia LaLashon HaʿIvrit) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | he |
ISO 639-2 | heb |
ISO 639-3 | Variously: heb — தற்கால எபிரேயம் hbo — விவிலிய எபிரேயம் (வழிபாட்டு மொழி) smp — சமாரியன் எபிரேயம் (வழிபாட்டு மொழி) obm — மொவாபைட் (வழக்கொழிந்த) xdm — எடொமைட் (வழக்கொழிந்த) |
மொழிக் குறிப்பு | hebr1246[4] |
Linguasphere | 12-AAB-a |
உலகில் எபிரேய மொழி பேசுபவர்கள்: பெரும்பான்மையாக எபிரேயம் பேசுபவர்களுள்ள பகுதி குறைவாக எபிரேயம் பேசுபவர்களுள்ள பகுதி | |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
இந்தக் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம். |
இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் எபிரேயம் பேசப்படுகிறது. இவர்கள் ஆதியாகமத்தின்படி (32:28) யாக்கோபின் வழிவந்த இசுரயேலர்கள் எனப்படுகின்றனர். ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் அசிகலா விழிப்புணர்வு (Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடாவின் (Eliezer Ben-Yehuda) பெருமுயற்சியால் மொழி வழக்கத்திற்கு வந்துள்ளது.[8][9]
பார் கோக்பா கிளர்ச்சிக்குப் பின்னர், கி.பி. 100-200 வரையிலான காலகட்டங்களில் எபிரேயம் தினசரி வழக்கு மொழியாக வழங்கப்பட்டது. ஆயினும் அராமியமும், கிரேக்கமும் உயர் அதிகாரிகள், புலம்பெயர்ந்தோரால் அதிகம் பேசப்பட்டது.[10]
தோராவும் (யூத விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்) ஏனைய யூத விவிலிய நூல்களும் விவிலிய எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டன.