நிகோனியம் (Nihonium, நிஹோனியம், குறியீடு: Nh) என்பது அணு எண் 113 ஐக் கொண்டுள்ள ஒரு தனிமம் ஆகும். இது கதிரியக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ள ஒரு செயற்கைத் தனிமம் (இயற்கையில் கிடைக்காதது, ஆய்வுகூடத்தில் மட்டும் உருவாக்கக்கூடியது) ஆகும். நிகோனியம்-286 என்பது நிகோனியத்தின் நிலைத்தன்மை கொண்ட ஓரிடத்தான் ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 20 செக்கன்கள். நிகோனியம் எகா-தாலியம் அல்லது தனிமம்-113 எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தனிமம் முதல் தடவையாக 2003 ஆம் ஆண்டில் உருசியாவில் தூப்னா நகரில் உள்ள அணுக்கரு ஆய்வுக்கான ஒருங்கிணைந்த கல்விக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2015 திசம்பரில், பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (ஐயூபிஏசி) இத்தனிமத்தை அங்கீகரித்தது.[6] 2016 நவம்பரில், ஐயூபிஏசி இதற்கு நிஹோனியம் என அதிகாரபூர்வமாகப் பெயரிட்டது..[7] இது யப்பானிய மொழியில் யப்பான் நாட்டைக் குறிக்கும் பெயராகும். 2016 நவம்பர் 28 இல் இப்பெயர் அதிகாரபூர்வமானது.[8][9]

விரைவான உண்மைகள் நிகோனியம், பொதுப் பண்புகள் ...
நிகோனியம்
113Nh
Tl

Nh

(Uhs)
கோப்பர்நீசியம்நிகோனியம்பிளெரோவியம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் நிகோனியம், Nh, 113
உச்சரிப்பு /nɪˈhniəm/
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 13, 7, p
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[286]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d10 7s2 7p1
2, 8, 18, 32, 32, 18, 3
வரலாறு
கண்டுபிடிப்பு RIKEN (2004)
Joint Institute for Nuclear Research, Lawrence Livermore National Laboratory (2003, முதலாவதாக அறிவிப்பு)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (அனுமானம்)[1][2][3]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 16 g·cm−3
உருகுநிலை 700 K, 430 °C, 810 °F
கொதிநிலை 1430 K, 1130 °C, 2070 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 7.61 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 130 கி.யூல்·மோல்−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் −1, 1, 3, 5
((predicted)[1][4][5])
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: {{{1st ionization energy}}} kJ·mol−1
2வது: {{{2nd ionization energy}}} kJ·mol−1
3வது: {{{3rd ionization energy}}} kJ·mol−1
அணு ஆரம் 170 பிமீ
பங்கீட்டு ஆரை 172180 pm
(extrapolated)[3]
பிற பண்புகள்
CAS எண் 54084-70-7
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: நிகோனியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
286Nh செயற்கை 20 s α 9.63 282Rg
285Nh syn 5.5 s α 9.74, 9.48 281Rg
284Nh syn 0.48 s α 10.00 280Rg
EC 284Cn
283Nh syn 0.10 s α 10.12 279Rg
282Nh syn 70 ms α 10.63 278Rg
278Nh syn 0.24 ms α 11.68 274Rg
·சா
மூடு

தனிம அட்டவணையில், இது p-வலய அதி-பார தனிமம் ஆகும். இது 7வது வரிசையில் போரான் குழுமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் இயல்புகள் போரான், அலுமினியம், காலியம், இண்டியம், தாலியம் ஆகியவற்றை ஒத்துள்ளதோடு, குறை மாழையாகத் தொழிற்படுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.