ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு
From Wikipedia, the free encyclopedia
ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (ஆங்கில மொழி: Shazam! Fury of the Gods) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது ஷசாம் என்ற டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய மீநாயகன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நியூ லைன் சினிமா, மேட் கோஸ்ட் புரொடக்சன்சு, தி சப்பிரான் கம்பெனி மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்[1] என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.
ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு | |
---|---|
இயக்கம் | டேவிட் எப். சாண்ட்பெர்க்கு |
தயாரிப்பு | |
கதை |
|
மூலக்கதை | டிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரங்கள் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கியுலா படோஸ் |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 2023 (2023-317) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $110–125 மில்லியன் |
மொத்த வருவாய் | $133.8 மில்லியன் |
இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பன்னிரட்டாவது திரைப்படமாகவும் 2019 ஆம் ஆண்டு வெளியான ஷசாம்![2] என்ற திரைப்படத்தின் தொடர்சியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை டேவிட் எப். சாண்ட்பெர்க்கு என்பவர் இயக்க, கென்றி கெய்டன்[3] மற்றும் கிறிஸ் மோர்கன் ஆகியோர் திரைக்கதை எழுத, சக்கரி லெவி,[4][5][6][7] அசர் ஏஞ்சல், ஜாக் இடிலன் கிரேசர், திஜிமோன் கவுன்சோ, ரேச்சல் சீக்லர்,[8] கெலன் மிரென்[9] மற்றும் இலூசி லியு[10] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு படம் மார்ச்சு 14, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பாக்சு வில்லேஜ் தியேட்டரில் திரையிடப்பட்டது, மற்றும் மார்ச்சு 17 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் $125 மில்லியன் தயாரிப்பு செலவில் $134 மில்லியன் வசூலித்தது.