From Wikipedia, the free encyclopedia
டேவிட் எப். சாண்ட்பெர்க்கு (ஆங்கில மொழி: David F. Sandberg) (பிறப்பு: 21 சனவரி 1981) என்பவர் சுவீடன் நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பல குறும் படங்களுக்கும் மற்றும் லைட்ஸ் அவுட் (2016), அன்னாபெல்: கிரேயேசன்[2] (2017) போன்ற திகில் திரைப்படங்களுக்கு பிரபலமானவர். அதை தொடர்ந்து ஷசாம்![3] (2019), ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
டேவிட் எப். சாண்ட்பெர்க்கு | |
---|---|
பிறப்பு | 21 சனவரி 1981 ஜான்கோபிங், சுவீடன் |
மற்ற பெயர்கள் | போனிஸ்மாஷர் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | லோட்டா லாஸ்டன் (தி. 2013) [1] |
டேவிட் எப். சாண்ட்பெர்க்கு என்பவர் சனவரி 21, 1981 ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டில் ஜான்கோபிங்கில் பிறந்தார். இவரது சிறுவயதிலிருந்து பல திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தார். இவர் இளம் வயதிலேயே ஒரு காணொளி கடையில் பணிபுரிந்தார், மேலும் திரைப்படத் தயாரிப்பிற்காக தனது சொந்த படப்பிடிப்பு சாதனத்தை வாங்குவதற்காக பணத்தைச் சேமித்தார்.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.