வேலூர்
தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று. வேலூரும் திருவண்ணாமலையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின் / From Wikipedia, the free encyclopedia
வேலூர் (Vellore) (அ) இராய வேலூர் (Raya Vellore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர்க் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், இராட்டிரகூடர்கள், பல்லவர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர்.
வேலூர்
இராய வேலூர் | |
---|---|
அடைபெயர்(கள்): வெல்லூர், கோட்டை மாநகரம் | |
ஆள்கூறுகள்: 12.916500°N 79.132500°E / 12.916500; 79.132500 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | வேலூர் |
பகுதி | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | வேலூர் மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | கதிர் ஆனந்த் (திமுக) |
• சட்டமன்ற உறுப்பினர் | பி. கார்த்திகேயன் |
• மாவட்ட ஆட்சியர் | பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மாநகரம் | 87.915 km2 (33.944 sq mi) |
ஏற்றம் | 239 m (784 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மாநகராட்சி | 1,85,803 |
• தரவரிசை | 8 |
• பெருநகர் | 4,84,690 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 632 001 |
தொலைபேசிக் குறியீடு | 91- 416 |
வாகனப் பதிவு | TN 23, |
சென்னையிலிருந்து தொலைவு | 138 கி.மீ (86 மைல்) |
பெங்களூரிலிருந்து தொலைவு | 212 கி.மீ (131 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 213 கி.மீ (132 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 269 கி.மீ (167 மைல்) |
இணையதளம் | vellore |
இது தமிழகத் தலைநகரான சென்னைக்கு மேற்கே சுமார் 138 கிலோமீட்டர் (86 மைல்) தொலைவிலும், திருவண்ணாமலைக்கு வடக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில்துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசின் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன.
இந்நகரம், 2008-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வேலூர் மாநகராட்சி மூலம் ஆளப்படுகிறது. மாநகராட்சி சட்டத்தின்படி வேலூர் நகரம் 1,054 ஹெக்டேர் (10.54 சதுர கிமீ ) பரப்பளவும், 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1,77,413 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி,[3] மொத்த நகர்ப்புறத்தின் மக்கள்தொகை 1,85,895 ஆகும். இந்நகரம் இரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், சாலைப் போக்குவரத்தே முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது. சென்னை பன்னாட்டு விமானநிலையம் இந்நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.