![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/6/6c/Vellore_Institute_of_Technology_seal.svg/langta-640px-Vellore_Institute_of_Technology_seal.svg.png&w=640&q=50)
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
விஐடி / From Wikipedia, the free encyclopedia
வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அல்லது வி.ஐ.டி பல்கலைக்கழகம் (VIT University) தமிழ் நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொறியியல் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்து, அதன் வேந்தராகவும் இருந்து வருபவர் ஜி.விசுவநாதன் ஆவார். 1984ல் பொறியியல் கல்லூரியாகத் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 2000 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது, பின்னர் 2001 இல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்வு கண்டது. செப்டம்பர் 2006ல் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(Vellore Institute of Technology) என்று பெயர் மாற்றப்பட்டது.[1] வேலூரில் மட்டுமல்லாமல் சென்னை, அமராவதி, போபால் ஆகிய நகரங்களிலும் இதன் வளாகங்களுள்ளன.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
![]() | |
குறிக்கோளுரை | A place to learn; A chance to grow |
---|---|
வகை | பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1984 |
வேந்தர் | கோ. விஸ்வநாதன் |
துணை வேந்தர் | Dr. D. P. Kothari |
நிருவாகப் பணியாளர் | 1410 (ஆசிரியர்கள்=655) |
மாணவர்கள் | 12242 (ஆ=8895;பெ=3347) |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர், 250 ஏக்கர் (1 கிமீ²) |
இணையதளம் | http://www.vit.ac.in |
மூடு