![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Andhra_Pradesh_capital_region_in_August_2014.jpg/640px-Andhra_Pradesh_capital_region_in_August_2014.jpg&w=640&q=50)
அமராவதி (நகரம்)
ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
அமராவதி[5] இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக கட்டுமானத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.[6] இது ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது.[7][8] 22 அக்டோபர் 2015 அன்று அமராவதி கிராமத்திலிருந்து 23கி.மீ தொலைவிலுள்ள உத்தண்டராயுனிபாலெம் என்ற கிராமத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்நகர கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[9]
விரைவான உண்மைகள் அமராவதி అమరావతి, நாடு ...
அமராவதி
అమరావతి | |
---|---|
![]() ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பிராந்தியம் | கடலோர ஆந்திரா |
மாவட்டம் | குண்டூர் |
அரசு | |
• வகை | Regional Authority |
• நிர்வாகம் | APCRDA |
பரப்பளவு | |
• தலைநகரம் | 217.23 km2 (83.87 sq mi) |
• மாநகரம் | 8,390 km2 (3,240 sq mi) |
மக்கள்தொகை (2011)[4] | |
• தலைநகரம் | 1,03,000 |
• பெருநகர் | 4,60,000 |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
Pincode(s) | 520 xxx, 521 xxx, 522 xxx |
Area code | தொலைபேசிக் குறியீடு |
வாகனப் பதிவு | AP |
அதிகாரப்பூர்வ மொழி | தெலுங்கு |
இணையதளம் | APCRDA official website Amaravati official website |
மூடு
இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.