![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/VillivakkamStation_View2.jpg/640px-VillivakkamStation_View2.jpg&w=640&q=50)
வில்லிவாக்கம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் (Villivakkam railway station) சென்னை புறநகர் இருப்புவழி வலையமைப்பில் சென்னை மத்திய தொடருந்து-அரக்கோணம் தொடருந்து நிலையப் பிரிவில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த நிலையம், வில்லிவாக்கம், கொளத்தூர், பாடி ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ளது. வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 10.25 மீ உயரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் வில்லிவாக்கம், பொது தகவல்கள் ...
வில்லிவாக்கம் | |
---|---|
சென்னை புறநகர் இருப்புவழி மற்றும் தென்னக இரயில்வே தொடருந்து நிலையம் | |
![]() வில்லிவாக்கம் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | வில்லிவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 13°6′37″N 80°12′33″E |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | சென்னை புறநகர் இருப்புவழியின் மேற்கு, மேற்கு வடக்கு மற்றும் மேற்கு தெற்கு தடங்கள் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 5 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைக்கு மேல் நிலையானது |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | வி.எல்.கே |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | 29 நவம்பர் 1979[1] |
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே |
பயணிகள் | |
பயணிகள் 2013 | 32,000/நாளுக்கு[2] |
மூடு