விண்வெளித் துறை
From Wikipedia, the free encyclopedia
விண்வெளித் துறை (Department of Space) இந்திய விண்வெளித் திட்டத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான ஒரு இந்திய அரசுத் துறையாகும். இது விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய பல நிறுவனங்களை நிர்வகிக்கிறது.
அண்டரிகா விபாக் | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | அண்டரிக்சு பவன், நியூ பெல் சாலை, பெங்களூரு, கருநாடகம், இந்தியா |
ஆண்டு நிதி | ₹12,473.26 கோடி (US$1.6 பில்லியன்)(2019–20 est.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் | |
பொறுப்பான துணை அமைச்சர்கள் | |
துறை தலைமை |
|
மூல துறை | இந்தியப் பிரதமரின் அலுவலகம் |
கீழ் துறை |
|
வலைத்தளம் | https://www.isro.gov.in |
இந்திய விண்வெளி திட்டமானது நாட்டினுடைய சமூக-பொருளாதார நன்மைக்காக விண்வெளி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை செய்வதற்கும், பயன்பாட்டிற்கும் உந்துதலாக நோக்கம் கொண்டதாகும். இது இரண்டு பிரதான செயற்கைக்கோள் அமைப்புகளை கொண்டது. ஒன்று இன்சாட் இது தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானிலை சேவைகள் ஆகியவற்றிற்கும் இந்திய தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள்கள் ஐ.ஆர்.எஸ் வளங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஐ.ஆர்.எஸ் மற்றும் இன்சாட் வகுப்பு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைக்க இரண்டு வாகனங்களை, பி. எஸ். எல். வி மற்றும் ஜி. எஸ். எல். வி ஆகியவற்றை இது உருவாக்கியுள்ளது.