தொடர்பாடல்
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதல் / From Wikipedia, the free encyclopedia
தொடர்பாடல் (communication) என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு செய்தியை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட நடை முறையின் மூலம், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை அல்லது இலக்கை நோக்கிச் செல்கின்றன. தொடர்பு கொள்ளுதலை ஒரு கல்வி முறையாகப் பார்க்கையில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு[1].