இலிம்பாங் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இலிம்பாங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Limbang; ஆங்கிலம்: Limbang District; சீனம்: 林梦县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; இலிம்பாங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[1]
விரைவான உண்மைகள் இலிம்பாங் மாவட்டம், நாடு ...
இலிம்பாங் மாவட்டம் | |
---|---|
Limbang District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 4°15′0.00″N 115°10′0.01″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | இலிம்பாங் பிரிவு |
மாவட்டம் | இலிம்பாங் மாவட்டம் |
நிர்வாக மையம் | இலிம்பாங் நகரம் |
மாவட்ட அலுவலகம் | இலிம்பாங் |
உள்ளாட்சி | லிம்பாங் மாவட்ட மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,978.10 km2 (1,535.95 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 90,990 |
• அடர்த்தி | 23/km2 (59/sq mi) |
இனக்குழுக்கள் | |
• புரூணை மலாய்; கெடாயான் | 30.3% |
• இபான் | 24.7% |
• சீனர்கள் | 21.3% |
• இதர மக்கள் | 23.7% |
மலேசிய அஞ்சல் குறியீடு | 98700 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60-85 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QL |
உரிமை கோரல் | புரூணை |
இணையதளம் | www |
மூடு
இந்த மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கில் புரூணை நாடு (Brunei Darussalam); தென்கிழக்கில் லாவாசு மாவட்டம் (Lawas District); தெற்கு மற்றும் தென்மேற்கில் மிரி மாவட்டம் (Miri District) ஆகிய நிலப் பகுதிகள் எல்லைகளாக உள்ளன.
புரூணையின் வடக்குப் பகுதியும் மற்றும் கடலோரப் பகுதிகளும் லிம்பாங் மாவட்டத்துடன் மிக நெருக்கமாக இருப்பதால், குடியேற்றச் சாவடிகளின் வழியாக மட்டுமே லிம்பாங் பகுதிகளை அணுக முடியும்.