இபான்
From Wikipedia, the free encyclopedia
இபான் அல்லது கடல் டயாக்குகள் (மலாய்: Iban; ஆங்கிலம்: Iban; சீனம்: 伊班族) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் உள்ள டயாக் மக்களின் ஒரு பிரிவு மக்களாகும். இபான் வம்சாவழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடல் டயாக்குகள் (Sea Dayaks) என்று அறியப் படுகிறார்கள்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
1920-1940-இல் போர் உடையில் போர்னியோ இபான் டயாக்குகள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
approximately 1,070,500 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
போர்னியோ: | |
மலேசியா (சரவாக், சபா, லபுவான், தீபகற்ப மலேசியா) | 753,500[1] |
இந்தோனேசியா | 297,000+[2] |
(மேற்கு கலிமந்தான்) | 297,000[3] |
புரூணை | 20,000[4] |
மொழி(கள்) | |
இபான் மொழி, இந்தோனேசிய மொழி, சரவாக் மலாய் மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம், ஆங்கிலிக்கனிசம், ஆன்மீகம், இஸ்லாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கந்து, முவாலாங், செம்புருவாங், புகாவ், செபாரு |
மூடு
டயாக் எனும் சொல் மேற்கத்தியர்களால் வழங்கப்பட்ட சொல். தலை வேட்டையாடுதல் (headhunting) எனும் காட்டுவாசிப் பழக்கத்திற்கு இபான்கள் புகழ் பெற்றவர்கள். மேலும் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிடும் குணம் கொண்ட பழங்குடியினராகக் கருதப் படுகிறார்கள்.