![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Limbang_plaza.jpg/640px-Limbang_plaza.jpg&w=640&q=50)
இலிம்பாங்
சரவாக் இலிம்பாங் மாவட்டத்தில் உள்ள நகரம். / From Wikipedia, the free encyclopedia
இலிம்பாங் (மலாய் மொழி: Limbang; ஆங்கிலம்: Limbang; சீனம்: 林梦) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் இலிம்பாங் பிரிவு; இலிம்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும். இது இலிம்பாங் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
விரைவான உண்மைகள் இலிம்பாங் நகரம், நாடு ...
இலிம்பாங் நகரம் | |
---|---|
Limbang Town | |
சரவாக் | |
![]() இலிம்பாங் நகர மையம் | |
ஆள்கூறுகள்: 4°45′33″N 115°00′24″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | இலிம்பாங் |
மாவட்டம் | இலிம்பாங் |
ஜேம்சு புரூக் | 1890 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 98700 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60-85 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QL |
ஆளுநர் | அகமட் டெனி பவுசி |
மூடு
லிம்பாங் மாவட்டம்; புரூணை சுல்தானகத்தை இரண்டாகப் பிரிக்கின்றது. இலிம்பாங் நிலப்பகுதி, புரூணை சுல்தானகத்தால் ஆளப்பட்ட போது, அதை புரூணையின் "அரிசிக் கிண்ணம்" (Rice Bowl of Brunei) என்று அழைத்தார்கள்.
ஏனெனில் இலிம்பாங் மாவட்டம் புரூணைக்கு சவ்வரிசி மற்றும் அரிசியை வழங்கி வந்த ஒரு பெரிய விவசாயப் பகுதியாகும். இலிம்பாங்கின் பொருளாதார முக்கியத்துவமே, வெள்ளை ராஜா சார்லஸ் புரூக்கை இலிம்பாங்கைக் கைப்பற்றத் தூண்டியது.