நடிகை From Wikipedia, the free encyclopedia
ரோஜா செல்வமணி (Roja Selvamani, பிறப்பு: 17 நவம்பர் 1972) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
ரோஜா ராணி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 சூன் 2014 | |
முன்னையவர் | கலி முது கிருஷ்ணாம நாயுடு |
தொகுதி | நகரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 நவம்பர் 1972 பகரபேட்டா, திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா |
துணைவர் | ஆர். கே. செல்வமணி[1] |
பிள்ளைகள் | 2 |
வேலை |
|
விருதுகள் | நந்தி விருது (1991),(1994),(1998) சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது |
இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லதா ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட ரோஜா 1972 நவம்பர் 17 அன்று ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் நாகராஜா ரெட்டி, இலலிதா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு குமாரசாமி ரெட்டி, இராமபிரசாத் ரெட்டி ஆகிய இரு சகோதரர்கள் உண்டு.
பின்னர், இந்த குடும்பம் ஐதராபாத்திற்கு இடம் மாறினார். இவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். ரோஜா திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு குச்சிப்புடி கற்று நடனம் ஆடினார்.
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1992 | செம்பருத்தி | செம்பருத்தி | |
1992 | சூரியன் | ||
1993 | உழைப்பாளி | விமலா | |
1994 | அதிரடிப்படை | ||
1994 | இந்து | இந்து | |
1994 | வீரா | ரூபா | |
1994 | சரிகமபத நீ | அர்ச்சனா | |
1995 | எங்கிருந்தோ வந்தான் | அர்ச்சனா | |
1995 | ராஜ முத்திரை | ||
1995 | அசுரன் | ||
1995 | இராசய்யா | அனிதா | |
1995 | மக்கள் ஆட்சி | சரசு | |
1995 | ஆயுத பூஜை | சிந்தாமணி | |
1996 | பரம்பரை | பருவதம் | |
1996 | ராஜாளி | ||
1996 | தமிழ்ச் செல்வன் | பாத்திமா | |
1997 | வள்ளல் | ரோஜா | |
1997 | அடிமைச் சங்கிலி | ||
1997 | பாசமுள்ள பாண்டியரே | ||
1997 | கடவுள் | பார்வதி | |
1997 | அரசியல் | சுப்ரியா | |
1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | ராதா | சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது[2][3] தமிழில் சிறந்த நடிகைக்கான சினிமா எக்சுபிரசு விருது |
1998 | என் ஆசை ராசாவே | ||
1998 | வீரம் விளஞ்ச மண்ணு | ||
1998 | புதுமைப்பித்தன் | செண்பகம் | |
1998 | காதல் கவிதை | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
1999 | ஹவுஸ்புல் | ||
1999 | சின்ன ராஜா | இராதா | |
1999 | நெஞ்சினிலே | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
1999 | சின்ன துரை | புஷ்பவல்லி | |
1999 | சுயம்வரம் | ஈஸ்வரி | |
1999 | முகம் | மாலினி | |
1999 | ஊட்டி | சாரு | |
1999 | திருப்பதி ஏழுமலை வெங்கடேசா | Ragini | |
1999 | அழகர்சாமி (திரைப்படம்) | சுஜா | |
2000 | திருநெல்வேலி | ||
2000 | ஏழையின் சிரிப்பில் | சரோஜா | |
2000 | சந்தித்த வேளை | திலகா | |
2000 | கந்தா கடம்பா கதிர்வேலா | ரூபிணி | |
2000 | கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | தமிழ்செல்வி | |
2000 | புரட்சிக்காரன் | கனிமொழி | |
2000 | இண்டிபெண்டன்ஸ் டே | ||
2000 | பொட்டு அம்மன் | துர்கா | |
2001 | லூட்டி | கீதா | |
2001 | நிலா காலம் | நிலாவின் தாய் | |
2001 | சொன்னால் தான் காதலா | ரோஜா | |
2001 | சூப்பர் குடும்பம் | ராக்கு | |
2001 | விஸ்வநாதன் ராமமூர்த்தி | மீனா | |
2001 | மாயன் | அழகம்மா | |
2001 | வீட்டோட மாப்பிள்ளை | மீனா | |
2001 | மிட்டா மிராசு | மீனாட்சி | |
2001 | கோட்டை மாரியம்மன் | கோட்டை மாரியம்மன் | |
2002 | அங்காள பரமேஸ்வரி | பார்வதி | |
2002 | ஷக்கலக்கபேபி | ||
2003 | அரசு | சிவகாமி | |
2003 | சக்சஸ் | இராதிகா | |
2005 | மாயாவி | அவராகவே | சிறப்புத் தோற்றம் |
2005 | கரகாட்டக்காரி | ||
2006 | பாசக்கிளிகள் | அங்கையர்கன்னி | |
2006 | பாரிஜாதம் | சிறீதரின் தாய் | |
2006 | குருசேத்திரம் | வைசுணவி | |
2007 | குற்றப்பத்திரிகை | கீதா | |
2007 | நினைத்து நினைத்துப் பார்த்தேன் | விக்ராந்தின் தாய் | |
2008 | எல்லாம் அவன் செயல் | ||
2011 | காவலன் | தேவிகா முத்து இராமலிங்கம் | |
2012 | சகுனி | சிறீதேவியின் தாய் | |
2013 | மாசாணி | இராசேசுவரி | |
2014 | ஆப்பிள் பெண்ணே | அம்சவள்ளி | |
2015 | கில்லாடி | அங்கையர்கன்னி | |
2015 | புலன் விசாரணை 2 | ||
2015 | என் வழி தனி வழி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.