![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Dr._Ram_Baran_Yadav.jpg/640px-Dr._Ram_Baran_Yadav.jpg&w=640&q=50)
ராம் பரன் யாதவ்
From Wikipedia, the free encyclopedia
மருத்துவர் ராம் பரன் யாதவ் (Dr. Ram Baran Yadav; நேபாள மொழி: रामवरण यादव) (பதவிக் காலம்: 2008–2015) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்[1]. ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார்[2].
விரைவான உண்மைகள் ராம் பரன் யாதவ்Ram Baran Yadavरामवरण यादव, நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர் ...
ராம் பரன் யாதவ் Ram Baran Yadav रामवरण यादव | |
---|---|
![]() 2008 இல் யாதவ். | |
நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் 23 சூலை 2008 – 29 அக்டோபர் 2015 | |
பிரதமர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரசந்தா மாதவ் குமார் நேபாள் சாலா நாத் கனால் |
Vice President | பார்மானந்த் ஜா |
முன்னையவர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா (தற்காலிகம்) |
பின்னவர் | வித்யா தேவி பண்டாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 பெப்ரவரி 1948 (1948-02-04) (அகவை 76) சப்பாகி, நேபாளம் |
அரசியல் கட்சி | நேப்பாளி காங்கிரஸ் |
முன்னாள் கல்லூரி | கல்கத்தா பல்கலைக்கழகம் |
மூடு
2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்[3]. 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்[4][5]. இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார்.