![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Arriving_At_Desert_Island.jpg/640px-Arriving_At_Desert_Island.jpg&w=640&q=50)
யாழ்ப்பாண மாவட்டம்
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.
விரைவான உண்மைகள் Jaffna District யாழ்ப்பாண மாவட்டம்යාපනය දිස්ත්රික්කය, நாடு ...
Jaffna District
யாழ்ப்பாண மாவட்டம் යාපනය දිස්ත්රික්කය | |
---|---|
![]() கடற்கரை | |
![]() இலங்கையில் அமைவிடம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
தலைநகர் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலாளர் பிரிவுகள் | |
அரசு | |
• மாவட்டச் செயலாளர் | S. அருமைநாயகம் |
• பா.உ. | பட்டியல் |
• மாசஉ | பட்டியல்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 1,025 km2 (396 sq mi) |
• நிலம் | 929 km2 (359 sq mi) |
• நீர் | 96 km2 (37 sq mi) 9.37% |
• பரப்பளவு தரவரிசை | 24வது (மொத்தப் பரப்பளவில் 1.56%) |
மக்கள்தொகை (2012 சனத்தொகைக் கணக்கெடுப்பு)[2] | |
• மொத்தம் | 5,83,378 |
• தரவரிசை | 16வது (மொத்தச் சனத்தொகையில் 2.88%) |
• அடர்த்தி | 570/km2 (1,500/sq mi) |
இனங்கள் (2012 சனத்தொகைக் கணக்கெடுப்பு)[2] | |
• இலங்கைத் தமிழர் | 577,246 (98.95%) |
• சிங்களவர் | 3,366 (0.58%) |
• இலங்கைச் சோனகர் | 2,139 (0.37%) |
• இந்தியத் தமிழர் | 499 (0.09%) |
• ஏனையோர் | 128 (0.02%) |
சமயங்கள் (2012 சனத்தொகைக் கணக்கெடுப்பு)[3] | |
• இந்துக்கள் | 483,900 (82.95%) |
• கிறித்தவர் | 94,146 (16.14%) |
• பௌத்தர் | 2,533 (0.43%) |
• இசுலாமியர் | 2,455 (0.42%) |
• ஏனையோர் | 344 (0.06%) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை) |
அஞ்சற் குறியீடு | 40000-40999 |
தொலைபேசிக் குறியீடு | 021 |
ஐஎசுஓ 3166 குறியீடு | LK-41 |
வாகனப் பதிவு | NP |
உத்தியோகபூர்வ மொழிகள் | தமிழ் |
இணையதளம் | Jaffna District Secretariat |
மூடு