மஸ்கி
கர்நாடகத்தில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
கர்நாடகத்தில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
மஸ்கி (Maski) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் அமைந்த தொல்லியல் களம் மற்றும் நகரம் ஆகும்.[1] மஸ்கி நகரம் துங்கபத்திரை ஆற்றின் துணை ஆறான மஸ்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மஸ்கி நகரத்தில் 1915-இல் சி. பீடன் என்பவரும், 1993-இல் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் என்பவரும் அகழாய்வு செய்த போது கிடைத்த அசோகரின் கல்வெட்டுக்களால் நன்கு அறியப்படுகிறது.[2] மஸ்கி நகரத்தில் கிடைத்த கல்வெட்டுக்களில் பேரரசர் அசோகர் பெயர் பொறித்த தேவனாம்பிரியா அசோகா என்று பெயர் பொறித்த கல்வெட்டுக்கள் முதன்முதலாக கிடைத்துள்ளது. முன்னர் அகழாய்வில் கிடைத்த அசோகரது கல்வெட்டுக்களில் தேவனாம்பிரியதர்சி எனும் பெயர் பொறித்த கல்வெட்டுககளே அதிகம் கிடைத்துள்ளது.[3][4]
மஸ்கி | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மஸ்கி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 15.96°N 76.65°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | ராய்ச்சூர் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 584 124 |
வாகனப் பதிவு | KA 36 |
இணையதளம் | www |
முதலாம் இராஜேந்திர சோழன் 1019-1020களில் மேலைச் சாளுக்கிய மன்னர் இரண்டாம் ஜெயசிம்மனை வென்று மஸ்கி நகரத்தை மேலாதிக்கம் செலுத்தினார்.[5]
இராபர்ட் புரூஸ் என்பவர் முதன்முதலில் 1870 மற்றும் 1888-ஆம் ஆண்டுகளில் மஸ்கி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தார். 1915-இல் ஐதராபாத் இராச்சியத்தின் சுரங்கப் பொறியாளர் சி. பீடன் என்பவர் 1935-37-ஆம் ஆண்டுகளில் மஸ்கி நகரத்தில் தொல்லியல் அகழாய்வு செய்த போது அசோகரின் சிறு கல்வெட்டுக்களை கண்டுபிடித்தார். 1954-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வாளர் அமலானந்த கோஷ் என்பவர் மஸ்கி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தார்.[1]
மஸ்கி தொல்லியல் களத்தில் பேரரசர் அசோகரின் தேவனாம்பிரியன் (தேவர்களுக்கு பிரியமானவன்) எனும் பெயர் பொறித்த சிறு கல்வெட்டுக்கள்[6] கிடைத்துள்ளது.[7][8] மஸ்கி சிறு கல்வெட்டில் அசோகர் பொறித்த வாசகம்:
ஒரு அறிவிப்பு: தேவனாம்பிரியா அசோகா .
நான் புத்த சாக்கியராக (பௌத்த சமயத்திற்கு மாறி) இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன
ஒரு வருடம் மற்றும் நான் சம்ஹாவுக்குச் சென்று வைராக்கியத்தையுடன் வாழ்ந்துள்ளேன்
ஜம்பூத் தீபத்தில் முன்பு (மனிதர்களுடன்) கலக்காமல் இருந்த கடவுள்கள் எப்படி (அவர்களுடன்) கலந்தார்கள்.
தர்மத்தை கடைபிடிக்கும் எளிய மனிதனும் கூட இந்த பேரின்பப் பொருளை அடைய முடியும்.
உயர்ந்த நபர் மட்டுமே இதை அடைய முடியாது என நினைக்கக் கூடாது.இக்கருத்து தாழ்ந்தவர்கள் மற்றும் உயர்ந்தவர்கள் இருவரிடமும் சொல்லப்பட வேண்டும்: "நீங்கள் இவ்வாறு செயல்பட்டால், இந்த விஷயம் (வளரும்) செழிப்பாகவும் நீண்ட காலமாக பல்கிப் பெருகும்.[9]
மஸ்கி நகரம் பெங்களூர்-குல்பர்க்கா சாலையில், பெங்களூரிலிருந்து 425 கிலோ மீட்டர் தொலைவிலும், இராய்ச்சூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.