From Wikipedia, the free encyclopedia
அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள், இதன் காலம் கிமு 250 ஆண்டுகள் ஆகும். பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் நிறுவிய 3 பெரும் பாறைக் கல்வெட்டுகளில் இரண்டாகும். இப்பெரும் பாறைக் கல்வெட்டுகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்தில் ஒன்றும், அதன் அருகே அமைந்த கிர்நார் மலையை நோக்கிச் செல்லும் சாலையில் ஒன்றும் அமைந்துள்ளது. கிர்நார் மற்றும் ஜூனாகத் பாறைக் கல்வெட்டுகளில் அசோகரின் மக்களுக்கான அறவுரைகள் பாளி மொழியில் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது. [1][2] அசோகரின் மூன்றாவது பெரும் பாறைக் கல்வெட்டு, பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மார்தன் மாவட்டத்தில் சபாஷ் கார்கி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு கரோஷ்டி எழுத்துமுறையில் எழுதப்ட்டுள்ளது.
குசராத்ததின் கத்தியவாரில் கிடைக்கப்பெற்ற அசோகரது கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு வசகங்களின் தமிழ் எழுத்து வடிவம் பின்வறுமாறு;
1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்
அசோகர், இக்கல்வெட்டிலும் தான் கௌதம புத்தர் எனும் தேவனுக்குப் பிரியமானவன் தேவனாம்பிரியா எனக்குறித்துள்ளார். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான சேர சோழ, பாண்டிய, சத்தியபுத்திரர், கிரேக்க மன்னர் இரண்டாம் ஆண்டியோகஸ் மற்றும் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, அவை கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும் பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் நல்வாழ்வு வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.