மலேசிய சிறைத் துறை
From Wikipedia, the free encyclopedia
மலேசிய சிறைத் துறை (மலாய்: Jabatan Penjara Malaysia; ஆங்கிலம்: Malaysian Prison Department); என்பது மலேசிய உள்துறை அமைச்சின் (Ministry of Home Affairs Malaysia) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[1]
விரைவான உண்மைகள் மலேசிய சிறைத் துறைMalaysian Prison DepartmentJabatan Penjara Malaysia, குறிக்கோள் ...
Malaysian Prison Department Jabatan Penjara Malaysia | |
---|---|
குறிக்கோள் | நட்பு, நேர்மை, அர்ப்பணிப்பு Friendly, Sincere Dedicated Mesra, Ikhlas Berbakti |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 19 மார்ச் 1790 |
அதிகார வரம்பு அமைப்பு | |
ஆட்சிக் குழு | மலேசிய அரசாங்கம் |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | காஜாங் சிலாங்கூர், மலேசியா |
அமைச்சர் |
|
துறை நிருவாகிகள் |
|
அமைச்சு | மலேசிய உள்துறை அமைச்சு |
பிரிவுகள் | (Rapid Action Troops) |
இணையத்தளம் | |
மூடு
நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளத் தடுத்து வைக்கும் சிறைகளுக்கு இந்தத் துறை பொறுப்பு வகிக்கிறது; அத்துடன் இந்தத் துறை, தடுப்பு மற்றும் மீட்சி நிறுவனங்களாகவும் (Detention and Recovery Institutions) செயல்படுகின்றன.[2]
இந்தத் துறையின் தலைமையகம் சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு, காஜாங், மலேசிய சிறை வளாகத்தில் (மலாய்: Kompleks Penjara Kajang; ஆங்கிலம்: Malaysia Prison Complex) உள்ளது.