![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Coat_of_arms_of_Malaysia.svg/langta-640px-Coat_of_arms_of_Malaysia.svg.png&w=640&q=50)
மலேசிய அரசாங்கம்
மலேசியாவின் அதிகாரப்பூர்வமான கூட்டாட்சி அரசாங்கம் / From Wikipedia, the free encyclopedia
மலேசிய அரசாங்கம் அல்லது மலேசிய மத்திய அரசாங்கம், (மலாய்: Kerajaan Persekutuan Malaysia; ஆங்கிலம்: Federal Government of Malaysia) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான கூட்டாட்சி அரசாங்கம் ஆகும்.
விரைவான உண்மைகள் உருவாக்கம், நாடு ...
![]() | |
உருவாக்கம் | 16 செப்டம்பர் 1963; 60 ஆண்டுகள் முன்னர் (1963-09-16)[1] |
---|---|
நாடு | ![]() |
இணையத்தளம் | malaysia.gov.my |
சட்டம் இயற்றும் பிரிவு | |
நாடாளுமன்றம் | மலேசிய நாடாளுமன்றம் |
அமர்விடம் | டேவான் ராக்யாட் டேவான் நெகாரா |
நிர்வாகப் பிரிவு | |
தலைவர் | மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் |
நியமித்தவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
தலைமையகம் | புத்ராஜெயா |
முக்கியப் பொறுப்பு | மலேசிய அமைச்சரவை |
நீதிப்பிரிவு | |
நீதிமன்றம் | மலேசிய பெடரல் நீதிமன்றம் (Federal Court of Malaysia) |
இருக்கை | மலேசிய நீதி அரண்மனை |
மூடு
மலேசியாவை நிர்வாகம் செய்யும் இந்த மலேசிய அரசு, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசப் பகுதியில் (Federal Territory of Putrajaya) இருந்து இயங்கி வருகிறது. இருப்பினும் மலேசிய அரசாங்கத்தின் சட்டங்களை இயற்றும் மலேசிய நாடாளுமன்றம் மட்டும் கோலாலம்பூர் மாநகரில் இருந்து இயங்கி வருகிறது.