![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f0/PAS_logo.svg/langta-640px-PAS_logo.svg.png&w=640&q=50)
மலேசிய இசுலாமிய கட்சி
From Wikipedia, the free encyclopedia
மலேசிய இசுலாமிய கட்சி (ஆங்கிலம்: Malaysian Islamic Party; மலாய்: Parti Islam Se-Malaysia; சீனம்: 马来西亚伊斯兰党; (சாவி: ڤرتي اسلام س-مليسيا) என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். பொதுவாக, இதனைப் பாஸ் கட்சி என்று அழைப்பார்கள். இந்தக் கட்சி இசுலாமிய சமயம் சார்ந்த கட்சியாகும். தற்போது இந்தக் கட்சியின் தலைவராக டத்தோ ஸ்ரீ அடி அவாங் இருக்கிறார்.
மலேசிய இசுலாமிய கட்சி Pan-Islamic Malaysian Party Parti Islam Se-Malaysia ڤرتي اسلام س-مليسيا | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | PAS / ڤاس |
தலைவர் | அடி அவாங் |
செயலாளர் நாயகம் | தக்கியூடின் அசன் |
நிறுவனர் | அகமட் புவாட் அசன் |
சமயத் தலைவர் | அசீம் ஜாசின் |
துணைத் தலைவர் உதவித் தலைவர் | துவான் இப்ராகிம் துவான் மான் 1. அகமது சம்சுரி மொக்தார் 2. நிக் மொகமட் அமார் நிக் அப்துல்லா 3. அட்ரிசு அகமது |
உலாமா தலைவர் | அகமட் யகயா |
முசுலிமாட் தலைவர் | நூரிடா முகமது சாலே |
இளைஞர் பிரிவு | அப்னான் அமிமி தாயிப் அசமுடின் |
குறிக்கோளுரை | இசுலாம் வழிநடத்தும் Islam Memimpin |
தொடக்கம் | 24 நவம்பர் 1951 (மலேசிய இசுலாமிய அமைப்பு) |
சட்ட அனுமதி | 31 மே 1955 |
பிரிவு | அம்னோ |
தலைமையகம் | No. 318-A, Jalan Raja Laut, 50350 கோலாலம்பூர், மலேசியா |
செய்தி ஏடு | அராக்கா |
கொள்கை |
|
அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
சமயம் | இசுலாம் |
தேசியக் கூட்டணி | மலேசிய கூட்டணி கட்சி (1971–1973) பாரிசான் நேசனல் (1973–1978) ஐக்கிய உம்மா அணி (1990–1996) மாற்று முன்னணி (1998–2004) பாரிசான் ராக்யாட் (2004-2008) பாக்காத்தான் ராக்யாட் (2008–2015) காகாசான் செசாத்திரா (2016–2020) முபகாட் நேசனல் (2019–2022) பெரிக்காத்தான் நேசனல் (2020 முதல்) |
பன்னாட்டு சார்பு | முசுலிம் சகோதரத்துவம்[1] |
நிறங்கள் | பச்சை; வெள்ளை |
மலேசிய மேலவை: | 6 / 70 |
மலேசிய மக்களவை: | 43 / 222 |
சட்டமன்றங்கள்: | 148 / 611 |
மந்திரி பெசார் | 4 / 13 |
தேர்தல் சின்னம் | |
![]() கிளாந்தான்; திராங்கானு தவிர்த்து ![]() கிளாந்தான்; திராங்கானு மாநிலங்களுக்கு மட்டும் | |
கட்சிக்கொடி | |
![]() | |
இணையதளம் | |
www |
இசுலாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இந்தக் கட்சியின் தலையாயக் கோட்பாடு ஆகும். கருத்தியல் ரீதியாக இந்தக் கட்சி இசுலாமிய அடிப்படைவாதத்தில் கவனம் செலுத்துகிறது.[2] இந்தக் கட்சியின் தேர்தல் தளம் பெரும்பாலும் தீபகற்ப மலேசியாவின் கிராமப்புறங்கள்; கிழக்குக் கடற்கரைகள் மற்றும் கிளாந்தான், திராங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா மாநிலங்களில் மையமாக உள்ளது.
2022 பொதுத் தேர்தல் மற்றும் 2023-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்களில், பேராக் மற்றும் பகாங் மாநிலங்களின் கிராமப்புறங்களிலும் இந்தக் கட்சி குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது. இந்த ஆதரவு "பச்சை அலை" ஆதரவு என்று அழைக்கப்படுகிறது.