வலது சாரி அரசியல்
மரபுவழியாக மற்றும் சமய கோட்பாடுகளின் அடிப்படையில் நிலை நிறுத்தப்படும் அரசியல் கோட்பாடு. / From Wikipedia, the free encyclopedia
வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.[1][2][3]
வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது.[4][5][6]