மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு
From Wikipedia, the free encyclopedia
மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு (மித்ரா) (மலாய்: Unit Transformasi Masyarakat India Malaysia (MITRA); ஆங்கிலம்: Malaysian Indian Community Transformation Unit) (MITRA) என்பது மலேசிய இந்திய சமூகத்தின் சமூக - பொருளாதார மேம்பாட்டிற்காக, மலேசிய அரசாங்கத்தால் 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவு (Socio Economic Development of Indian community in Malaysia) ஆகும்.[2]
Malaysian Indian Community Transformation Unit Unit Transformasi Masyarakat India Malaysia மலேசியப் பிரதமர் துறை | |
மித்ரா அமைவிடம் | |
மித்ரா மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 2014; 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2014) |
முன்னிருந்த மித்ரா |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Aras 4, Blok D5, Kompleks D, Pusat Pentadbiran Kerajaan Persekutuan
Presint 1, 62502, Wilayah Persekutuan Putrajaya, புத்ராஜெயா 02°56′39″N 101°42′34″E |
ஆண்டு நிதி | MYR 130,000,000 (2022 - 2023)[1] |
மித்ரா தலைமைகள் |
|
வலைத்தளம் | mitra |
இந்தத் துறை மலேசியப் பிரதமர் துறையின் கீழ் செயல்படுகிறது. முன்பு மலேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கியது.
மலேசிய இந்தியச் சமூகத்தில், குறிப்பாக பி40 (Bottom 40%) எனும் பின்தங்கிய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு அரசாங்கப் பிரிவாக மித்ரா எனும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவு 2019-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த அமைப்பு, இந்திய சமூகப் பிரிவின் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (செடிக்) (Socio-Economic Development of the Indian Community Unit (SEDIC) என்று அழைக்கப் பட்டது.[3]