![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3e/Prabakaran_Parameswaran.png/640px-Prabakaran_Parameswaran.png&w=640&q=50)
பிரபாகரன் பரமேசுவரன்
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பிரபாகரன் பரமேசுவரன் (ஆங்கிலம்; மலாய்: Prabakaran Parameswaran; சீனம்: 巴拉峇卡兰) என்பவர் 2018 மே மாதம் முதல் கோலாலம்பூர் பத்து மக்களவைத் தொகுதியின் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார். மலேசிய அரசியல் வரலாற்றில், 22 வயதில் மலேசிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனும் சாதனையும் படைக்கிறார்.[2]
பிரபாகரன் பரமேசுவரன் Yang Berhormat Tuan Prabakaran Parameswaran | |
---|---|
![]() | |
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு மித்ரா தலைவர்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 பிப்ரவரி 2024 | |
பிரதமர் | அன்வர் இப்ராகீம் |
அமைச்சர் | ஆரோன் அகோ டகாங் |
தலைமை இயக்குனர் | ரவீந்திரன் நாயர் |
முன்னையவர் | ரமணன் ராமகிருஷ்ணன் |
[[மலேசியர் நாடாளுமன்றம்]] for பத்து | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மே 2018 | |
முன்னையவர் | சுவா தியான் சாங் (Chua Tian Chang) (பாக்காத்தான்–பி.கே.ஆர்) |
பெரும்பான்மை | 24,438 (2018) 22,241 (2022) |
தலைவர் மக்கள் நீதிக் கட்சி; பத்து மக்களவை தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 சூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | அன்வர் இப்ராகீம் |
Deputy | முகமது அபீஸ் சுல்கபிலி |
முன்னையவர் | சுவா தியான் சாங் |
மலேசிய கூட்டரசு பகுதி மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் | |
பதவியில் 20 பெப்ரவரி 2020 – 27 ஆகஸ்டு 2022 | |
குடியரசுத் தலைவர் | அன்வர் இப்ராகீம் |
தேசிய இளைஞர் தலைவர் | அக்மல் நசுருல்லா முகமட் நசீர் (2020–2022) ஆடம் அட்லி (2022) |
மலேசிய கூட்டரசு பகுதி தலைவர் | ஜாகிர் அசன் (2020–2022) ராபிசி ராம்லி (2022) |
முன்னையவர் | நாயிம் பிரண்டேஜ் |
பின்னவர் | முகமது அசிபர் ஆசா அசார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரபாகரன் பரமேசுவரன் 8 பெப்ரவரி 1996 (1996-02-08) (அகவை 28) பத்து, கோலாலம்பூர், மலேசியா |
குடியுரிமை | மலேசியா |
தேசியம் | மலேசியர் |
அரசியல் கட்சி | (பி.கே.ஆர்) (2018 தொடக்கம்) சுயேச்சை (2018) |
பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் (2018 தொடக்கம்) |
முன்னாள் கல்லூரி | பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | மாணவர் |
மலேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா (Malaysian Indian Community Transformation Unit) (MITRA) அமைப்பின் சிறப்புத் தலைவராக, 2024 பிப்ரவரி மாதம் முதல் பதவி வகிக்கின்றார்.[3][4] [5]
பாக்காத்தான் கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் நீதிக் கட்சியின் (PKR) உறுப்பினரான அவர், மக்கள் நீதிக் கட்சியில் சேருவதற்கு முன்பு சுயேச்சையாக இருந்தார். தற்போது பி.கே.ஆர் கட்சியின் மலேசிய கூட்டரசு பகுதி இளைஞர் பிரிவு தலைவராகப் பொறுப்பு வகிக்கும் இவர், பத்து மக்களவை தொகுதியில் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.[6]