பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்
From Wikipedia, the free encyclopedia
பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[3] (ஆங்கில மொழி: Batman v Superman: Dawn of Justice) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய பேட்மேன் மற்றும் சூப்பர் மேன் ஆகிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், டிசி என்டர்டெயின்மென்ட், ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், அட்லஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான மேன் ஆஃப் ஸ்டீல்[4][5] என்ற திரைப்படத்தின் தொடர்சியாகவும் மற்றும் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் இரண்டாவது திரைப்படமும் ஆகும்.
பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் | |
---|---|
இயக்கம் | சாக் சினைடர்[1] |
தயாரிப்பு | சார்லஸ் ரோவன் டெபோரா சினைடர் |
மூலக்கதை | டிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரங்கள் |
திரைக்கதை | கிறிஸ் டெரியோ டேவிட் எஸ். கோயர் |
இசை | ஹான்ஸ் சிம்மர்[2] ஜன்கி எக்ஸ்எல் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | லாரி ஃபாங் |
படத்தொகுப்பு | டேவிட் ப்ரென்னர் |
கலையகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் டிசி என்டர்டெயின்மென்ட் ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் அட்லஸ் என்டர்டெயின்மென்ட் குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ் |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 25, 2016 (2016-03-25) (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $250–300 |
மொத்த வருவாய் | $873.6 மில்லியன் |
சாக் சினைடர் இயக்கத்தில் கிறிஸ் டெரியோ மற்றும் டேவிட் எஸ். கோயர் திரைக்கதையில் வெளியான இப்படத்தில் பென் அஃப்லெக், ஹென்றி கவில், ஏமி ஆடம்சு, ஜெசி ஐசன்பெர்க், டையான் லேன், லாரன்ஸ் பிஷ்பர்ன், ஜெர்மி அயர்ன்ஸ், ஹாலி ஹன்டர் மற்றும் கால் கடோட் ஆகியோர் நடித்துள்ளனர். இது பேட்மேன் மற்றும் சூப்பர் மேன் கதாப்பாத்திரங்கள் ஒன்றாக திரையில் தோன்றும் (அசைவூட்டத் திரைப்படம் அல்லாத) முதல் திரைப்படம் இதுவாகும்.
பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் படம் 25 மார்ச் 2016 ஆம் ஆண்டு 2டி மற்றும் 3டியில் வெளியானது. இந்த படமானது முதல் வாரத்தில் பல சாதனைகளை படைத்து ஒரு வலுவான அறிமுகத்தை கொடுத்தாலும் இதன் இரண்டாவது வார இறுதியில் வரலாற்று சரிவை சந்தித்தது. இப்படம் தயாரிப்பு ரீதியாக லாபத்தை கொடுத்தாலும் வசூல் ரீதியாக ஏமாற்றமாகக் கருதப்பட்டது. இந்த படத்தின் தொடர்சியாக ஜஸ்டிஸ் லீக் என்ற படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.