த இஸ்டோன் குவாரி
From Wikipedia, the free encyclopedia
த இஸ்டோன் குவாரி[2][3] (The Stone Quarry) (முன்னர் குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ்) என்பது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சாக் சினைடர், அவரது மனைவி 'டெபோரா சினைடர்'[4][5] மற்றும் அவர்களின் தயாரிப்பு பங்குதாரான 'வெஸ்லி காலர்' ஆகியோரால் 'குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ்' (2004-2019) என்ற பெயரில் நிறுவப்பட்ட்டது. பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் 'த இஸ்டோன் குவாரி' என்ற பெயரில் மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.
வகை | திரைப்பட தயாரிப்பு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2004; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2004) |
தலைமையகம் | பாசடீனா, கலிபோர்னியா,[1] ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | அமெரிக்காவின் சினிமா |
இணையத்தளம் | www |
இந்த நிறுவனம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்[6][7] நிறுவனத்துடன் இணைத்து மேன் ஆப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக்[8] (2017), அக்குவாமேன்[9] | 55/100[10] (2018), வொண்டர் வுமன் 1984[11] (2020) போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளது.