வலைத்தளம்
இணையப்பக்கம் / From Wikipedia, the free encyclopedia
வலைத்தளம் அல்லது இணையத்தளம் (ஒலிப்புⓘ) (குறுக்கவடிவமாக தளம் என்றும் பயன்படுத்துவர்) என்பது பெரும்பாலும், இணையத்தில் குறித்த ஒரு ஆள்களப்பெயருக்கு அல்லது துணை ஆள்களப்பெயருக்கு பொதுவான வலைப்பக்கங்களை கூட்டாக குறிக்கும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வலைப்பக்கமானது பொதுவாக மீயுரை பரிமாற்ற வரைமுறையினூடாக (HTTP) பெற்று பார்வையிடக்கூடிய ஒரு HTML/XHTML ஆவணமாக இருக்கும். வலைத்தளத்திலுள்ள வலைப்பக்கங்கள் யாவும், பொதுவாக ஒரே வழங்கியில் வைக்கப்பட்டிருக்கும். சில வேளைகளில் வெவ்வேறு வழங்கிகளிலும் வைக்கப்பட்டிருக்கலாம்.
ஆள்களப்பெயரை உலாவியில் இட்டு வலைத்தளத்தை அணுகும்போது, அவ்வலைத்தளத்திலுள்ள அத்தனை பக்கங்களையும் சென்றடைந்துவிட முடியாது. முதலில் முகப்பு பக்கமே காண்பிக்கப்படும். முகப்புப்பக்கத்தில் மற்றைய பக்கங்களுக்கான தொடுப்புக்கள் இருக்கலாம். முகப்புபக்கத்தை முதன்மையாகக்கொண்டு மற்றைய பக்கங்கள் படிமுறை ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். வலைத்தளங்களை பொதுவாக இலவசமாகவே பார்வையிடலாம் என்ற போதிலும், சில வலைத்தளங்களைப் பார்வையிடவும் பயன்படுத்தவும் கட்டணம் செலுத்த வேண்டும்.
வலைத்தளங்களை பார்வையிடுவதற்கு இணைய உலாவி எனப்படும் மென்பொருள் தேவை.