ஜஸ்டிஸ் லீக் (திரைப்படம்)
௨௦௧௭-ல் வெளிவந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ஜஸ்டிஸ் லீக் (ஆங்கில மொழி: Justice League) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய மீநாயகன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், அட்லஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
ஜஸ்டிஸ் லீக் | |
---|---|
இயக்கம் | சாக் சினைடர் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | டிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரங்கள் |
திரைக்கதை |
|
இசை | டேனி எல்ப்மேன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஃபேபியன் வாக்னர் |
படத்தொகுப்பு |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 26, 2017 (2017-10-26) (பெய்ஜிங்) நவம்பர் 17, 2017 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 120 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $300 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $657.9 மில்லியன்[3] |
இப் படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஐந்தாவது[4][5][6] திரைப்படமாகவும் 2016 ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற திரைப்படத்தின் தொடர்சியாகவும் வெளியானது. சாக் சினைடர் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிறிஸ் டெரியோ மற்றும் ஜோஸ் வேடன் ஆகியோர் திரைக்கதை எழுத, பென் அஃப்லெக், ஹென்றி கவில், ஏமி ஆடம்சு, கால் கடோட், எசுரா மில்லர், ஜேசன் மோமோவா, ரே பிஸ்சர், ஜெர்மி அயர்ன்ஸ், டையேன் லேன், கோனி நீல்சன் மற்றும் ஜே. கே. சிம்மன்சு போன்ற பலர் நடித்துள்ளார்கள். படத்தில், பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் ஆகியோர் இணைந்து சூப்பர்மேனின் மரணத்திற்கு பிறகு உலகத்தை ஸ்டீபன்வொல்ப் மற்றும் அதன் பாராட்மான்சு படைகளிடமிருந்து காப்பாற்ற தி பிளாஷ், அக்குவாமேன் மற்றும் சைபர்க் ஆகியோரை உருவாக்குவது தான் கதை.
ஜஸ்டிஸ் லீக் படம் நவம்பர் 13, 2017 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது. நவம்பர் 17, 2017 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படம் உலகளவில் 657 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்தாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது படமாகவே கருதப்பட்டது. வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 60 மில்லியன் டாலர் நஷ்டம் என அறிவிக்கப்பட்டது.