![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Penampang_Sabah_TownView-03.jpg/640px-Penampang_Sabah_TownView-03.jpg&w=640&q=50)
பெனாம்பாங்
பெனாம்பாங் மாவட்டத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
பெனாம்பாங் (மலாய்: Penampang; ஆங்கிலம்: Penampang; சீனம்: 兵南邦 மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, பெனாம்பாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு மிக அருகில்; 11 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[1]
விரைவான உண்மைகள் பெனாம்பாங்Penampang Town, நாடு ...
பெனாம்பாங் Penampang Town | |
---|---|
![]() | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°55′00″N 116°07′00″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | மேற்கு கரை |
மாவட்டம் | பெனாம்பாங் |
நகரம் | பெனாம்பாங் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,52,709 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 89500 |
தொலைபேசி | +6-088 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | SA |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/Penampang_Sabah_MegalongMall-01.jpg/640px-Penampang_Sabah_MegalongMall-01.jpg)
இந்த நகரம் கோத்தா கினபாலுவின் புறநகர்ப் பகுதியாக மாறியுள்ளது. மற்றும் பெரும் கோத்தா கினபாலு (Greater Kota Kinabalu) பகுதியின் ஒரு பிரிவாகவும் கருதப் படுகிறது. அத்துடன் வடக்கு போர்னியோவின் வடக்கு முனையில் உள்ள கோத்தா கினபாலு மற்றும் கூடாட் நகரங்களை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும் உள்ளது.[2]
இந்த நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடசான் பூர்வீகப் பழங்குடி மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அடுத்த நிலையில் சீனர்களும்; மூருட்; மலாய் மக்களும் உள்ளார்கள்.