பினாங்கு நீரிணை
மலேசிய நீரிணைகளில் ஒன்றாகும். / From Wikipedia, the free encyclopedia
பினாங்கு நீரிணை (ஆங்கிலம்: Penang Strait அல்லது Straits of Penang; மலாய் மொழி: Selat Pulau Pinang; சீனம்: 槟威海峡; தாய் மொழி: ช่องแคบปีนัง; ஜாவி: مضيق بينانج) என்பது தீபகற்ப மலேசியாவையும், பினாங்கு தீவையும் இணைக்கும் நீரிணை ஆகும். இந்த நீரிணை 11 கி.மீ. அகலம் கொண்டது.[1]
விரைவான உண்மைகள் பினாங்கு நீரிணை, அமைவிடம் ...
பினாங்கு நீரிணை | |
---|---|
Penang Strait | |
அமைவிடம் | பினாங்கு |
ஆள்கூறுகள் | 5.3371°N 100.35°E / 5.3371; 100.35 |
Part of | மலாக்கா நீரிணை |
முதன்மை வரத்து | பினாங்கு தீவு:
|
வடிநில நாடுகள் | மலேசியா |
அதிகபட்ச அகலம் | 3 km (1.9 mi) - 11.265 km (7.000 mi) |
Islands | தீவுகள் அமான் தீவு, கெடோங் தீவு, செரஜாக் தீவு |
குடியேற்றங்கள் | குடியிருப்புகள் பினாங்கு தீவு: |
மூடு
இந்த நீரிணையின் மேற்கில் பினாங்கு தீவு உள்ளது. அதே சமயத்தில் பினாங்கு மாநிலத்தின் பிரதான நிலப் பகுதியான செபராங் பிறை, இந்த நீரிணையின் கிழக்கில் உள்ளது. நீரிணையின் வடக்கு முனையும் தெற்கு முனையும் மலாக்கா நீரிணையில் இணைகின்றன. மலாக்கா நீரிணை உலகின் பரபரப்பான கடல் வழித் தடங்களில் ஒன்றாகும்.