From Wikipedia, the free encyclopedia
பிக் பாஷ் லீக் (கே.எஃப்.சி பிக் பாஷ் லீக் என்று அலுவல் முறையில் அழைக்கப்படுகிறது ; பெரும்பாலும் பிபிஎல் அல்லது பிக் பாஷ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது) என்பது ஆத்திரேலிய தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்[3].
நாடு(கள்) | ஆத்திரேலியா |
---|---|
நிர்வாகி(கள்) | ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் |
வடிவம் | இருபது 20 |
முதல் பதிப்பு | 2011-12 |
கடைசிப் பதிப்பு | 2021-22 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை மற்றும் தகுதிநிலைச் சுற்றுகள் |
மொத்த அணிகள் | 8 அணிகள் |
தற்போதைய வாகையாளர் | பெர்த் ஸ்கோசேர்ஸ் |
அதிகமுறை வெற்றிகள் | பெர்த் ஸ்கோசேர்ஸ் (4 முறை வெற்றியாளர்) |
அதிகபட்ச ஓட்டங்கள் | கிறிஸ் லின் (3,005)[1] |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | சீன் அபோர்ட் (125)[2] |
வலைத்தளம் | www |
இதற்கு முன்னால் ஆத்திரேலியாவில் விளையாடப்பட்ட தொழில்முறை இருபது20 தொடரான "கே.எப்.சி இருபது20 பிக் பாஷ்" தொடருக்கு மாற்றாக இத்தொடர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியத்தால் 2011 இல் நிறுவப்பட்டது. மேலும் ,இத்தொடர் முன்னர் பங்கேற்ற ஆறு மாநில அணிகளுக்குப் பதிலாக எட்டு நகரங்கள் அடிப்படையிலான அணிகளைக் கொண்டது.
இத்தொடருக்கு, துரித உணவு விற்பனை நிறுவனமான கே.எஃப்.சி தொடக்கத்தில் இருந்து நிதியுதவி அளித்து வருகிறது .பிபிஎல் 11 (2021/22) தொடரின் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கோசேர்ஸ் அணி வாகை சூடியது.
பிபிஎல் போட்டிகள் ஆத்திரேலியாவில் கோடைக்காலத்தில் (டிசம்பர், ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்கள்) விளையாடப்படுகிறது.
போட்டியில் பங்கேற்ற எட்டு அணிகளில் ஆறு அணிகள் ஒரு முறையாவது பட்டத்தை வென்றுள்ளன. பெர்த் ஸ்கோசேர்ஸ் அணி இத்தொடரின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகும். சிட்னி சிக்சர்ஸ் அணி மூன்று முறை பட்டத்தை வென்றுள்ளது. அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய நான்கு அணிகள் பட்டத்தை தலா ஒருமுறை வென்ற மற்ற நான்கு அணிகள் ஆகும்.
முதல் பதிப்பைத் தவிர, 2017-18 பதிப்பு வரை இத்தொடரின் குழுநிலைச் சுற்றுகளில் 32 ஆட்டங்கள் இடம்பெறும்[4].
2018-19 பதிப்பு முதல், 56 ஆட்டங்கள் கொண்ட தொடராக பிபிஎல் மாற்றப்பட்டது. அதாவது, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 ஆட்டங்கள் ஆட வேண்டும்.
2011-12 பதிப்பு முதல் 2018-19 பதிப்பு வரை , தகுதிநிலைச் சுற்றுகளில் புள்ளிபட்டியலில் முதல் 4 இடம் பிடித்த அணிகள் விளையாடும்.
தகுதிநிலைச் சுற்றின் அமைப்பில் பல மாற்றங்கள் 2019-20 பதிப்பின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. [5] அதன்படி குழுநிலைச்சுற்றில் முதல் 5 இடங்கள் பிடித்த அணிகள் தகுதிநிலைச் சுற்றில் நுழையும். தகுதிநிலைச் சுற்றில் உள்ள போட்டிகள்[6] :-
போட்டி பெயர் | பங்கேற்பவர்கள் |
---|---|
எலிமினேட்டர் | புள்ளிப்பட்டியலில் 4வது மற்றும் 5வது இடம் பிடித்த அணிகள் |
நாக் அவுட் | எலிமினேட்டரில் வென்ற அணி மற்றும் 3வது இடம் பிடித்த அணி |
குவாலிபையர் | புள்ளிபட்டியலில் 1வது மற்றும் 2வது இடம் பிடித்த அணிகள் |
சேலஞ்சேர் | குவாலிபையறில் தோற்ற அணி மற்றும் நாக் அவுட்டில் வென்ற அணி |
இறுதி போட்டி | குவாலிபையறில் வென்ற அணி மற்றும் சேலஞ்சரில் வென்ற அணி |
அணிப்பெயர் | இடம் | சொந்த அரங்கம் | பயிற்சியாளர் | தலைவர் | |
---|---|---|---|---|---|
அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் | அடிலெயிட் , தெற்கு ஆத்திரேலியா | அடிலெய்ட் நீள்வட்ட அரங்கம் | ஜேசன் கில்லெப்ஸ் | டிராவிஸ் ஹெட் | |
பிரிஸ்பேன் ஹீட் | பிரிஸ்பேன் , குயின்ஸ்லாந்து | பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம் | வேட் செக்கோம்பே | உஸ்மான் கவாஜா | |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் | ஹோபார்ட், தாசுமேனியா | பெல்லரைவ் ஓவல் | ஆதம் கிரிபித் | மேத்தியு வேட் | |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் | மெல்போர்ன் , விக்டோரியா | மார்வெல்
அரங்கம், மெல்போர்ன் |
டேவிட் சகேர் | ஆரோன் ஃபிஞ்ச் | |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் | மெல்போர்ன் , விக்டோரியா | மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் | டேவிட் ஹசி | கிளென் மாக்சுவெல் | |
பெர்த் ஸ்கோசேர்ஸ் | பெர்த், மேற்கு ஆத்திரேலியா | பெர்த் துடுப்பாட்ட
அரங்கம் |
ஆதம் வோக்ஸ் | ஆஷ்டன் டர்னர் | |
சிட்னி சிக்சர்ஸ் | சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் | சிட்னி துடுப்பாட்ட அரங்கம் | கிரெக் ஷிப்ப்ர்ட் | மோசிஸ் ஹென்றிக்ஸ் | |
சிட்னி தண்டர் | சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் | சிட்னி காட்சி
அரங்கம் |
ட்ரேவோர் பெய்லிஸ் | ஜேசன் சங்கா |
பதிப்பு | இறுதிப்போட்டி | இறுதிப்போட்டி நடந்த
இடம் | ||
---|---|---|---|---|
வாகையாளர் | இறுதிப்போட்டி முடிவு | இரண்டாமிடம் | ||
2011-12 | சிட்னி சிக்சர்ஸ் 3/158 (18.5 நிறைவுகள் ) |
சிக்சர்ஸ் 7 வீழ்தல்களால் வெற்றி | பெர்த் ஸ்கோசேர்ஸ் 5/156 (20 நிறைவுகள் ) |
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட
வாரியா மைதானம், பெர்த் |
2012-13 | பிரிஸ்பேன் ஹீட் 5/167 (20 நிறைவுகள் ) |
ஹீட் 34 ஓட்டங்களால் வெற்றி Scorecard |
பெர்த் ஸ்கோசேர்ஸ் 9/133 (20 நிறைவுகள் ) |
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட
வாரியா மைதானம், பெர்த் |
2013-14 | பெர்த் ஸ்கோசேர்ஸ் 4/191 (20 நிறைவுகள் ) |
ஸ்கோசேர்ஸ் 39 ஓட்டங்களால் வெற்றி Scorecard |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் 7/152 (20 நிறைவுகள் ) |
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட
வாரியா மைதானம், பெர்த் |
2014-15 | பெர்த் ஸ்கோசேர்ஸ் 6/148 (20 நிறைவுகள் ) |
ஸ்கோசேர்ஸ் 4 வீழ்தல்களால் வெற்றி Scorecard |
சிட்னி சிக்சர்ஸ்
5/147 (20 நிறைவுகள் ) |
மனுக்கா நீள்வட்ட அரங்கம், கான்பரா |
2015-16 | சிட்னி தண்டர் 7/181 (19.3 நிறைவுகள் ) |
தண்டர் 3 வீழ்தல்களால் வெற்றி Scorecard |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் 9/176 (20 நிறைவுகள் ) |
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் |
2016-17 | பெர்த் ஸ்கோசேர்ஸ்
|
ஸ்கோசேர்ஸ் 9 வீழ்தல்களால் வெற்றி Scorecard |
சிட்னி சிக்சர்ஸ் 9/141 (20 நிறைவுகள் ) |
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட
வாரியா மைதானம், பெர்த் |
2017-18 | அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ்
|
ஸ்ரைக்கர்ஸ் 25 ஓட்டங்களால் வெற்றி Scorecard |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் 5/177 (20 நிறைவுகள் ) |
அடிலெய்ட் நீள்வட்ட அரங்கம் |
2018-19 | மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 5/145 (20 நிறைவுகள் ) |
ரெனிகேட்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றி Scorecard |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் 7/132 (20 நிறைவுகள் ) |
மார்வெல்
அரங்கம், மெல்போர்ன் |
2019-20 | சிட்னி சிக்சர்ஸ்
|
சிக்சர்ஸ் 19 ஓட்டங்களால் வெற்றி Scorecard |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் 6/97 (12 நிறைவுகள் ) |
சிட்னி துடுப்பாட்ட அரங்கம் |
2020-21 | சிட்னி சிக்சர்ஸ்
|
சிக்சர்ஸ் 27 ஓட்டங்களால் வெற்றி |
பெர்த் ஸ்கோசேர்ஸ் 9/161 (20 நிறைவுகள் ) |
சிட்னி துடுப்பாட்ட அரங்கம் |
2021-22 | பெர்த் ஸ்கோசேர்ஸ்
|
ஸ்கோசேர்ஸ் 79 ஓட்டங்களால் வெற்றி Scorecard |
சிட்னி சிக்சர்ஸ்
|
மார்வெல்
அரங்கம், மெல்போர்ன் |
2022-23 | பெர்த் ஸ்கோசேர்ஸ்
|
ஸ்கோசேர்ஸ் 5 விழத்தல்களால் வெற்றி Scorecard |
பிரிஸ்பேன் ஹீட்
|
பெர்த் துடுப்பாட்ட அரங்கம் , பெர்த் |
அணிப்பெயர் | 2011-12 | 2012-13 | 2013-14 | 2014-15 | 2015-16 | 2016-17 | 2017-18 | 2018-19 | 2019-20 | 2020-21 | 2021-22 | 2022–23 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் | 6th | 5th | 7th | SF (1st) | SF (1st) | 6th | W (2nd) | 7th | KO (3rd) | EF (5th) | CF (4th) | 7th | |
பிரிஸ்பேன் ஹீட் | 5th | W (4th) | 5th | 8th | 6th | SF (2nd) | 7th | 5th | 7th | CF (4th) | 7th | R (5th) | |
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் | SF (2nd) | 6th | R (4th) | 5th | 7th | 7th | R (4th) | SF (1st) | EF (4th) | 6th | EF (5th) | 6th | |
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் | 7th | SF (1st) | 6th | 6th | 5th | 5th | SF (3rd) | W (2nd) | 8th | 8th | 8th | KO (3rd) | |
மெல்போர்ன் ஸ்டார்ஸ் | SF (4th) | SF (3rd) | SF (1st) | SF (3rd) | R (2nd) | SF (4th) | 8th | R (4th) | R (1st) | 7th | 6th | 8th | |
பெர்த் ஸ்கோசேர்ஸ் | R (1st) | R (2nd) | W (3rd) | W (2nd) | SF (3rd) | W (1st) | SF (1st) | 8th | 6th | R (2nd) | W (1st) | W (1st) | |
சிட்னி சிகசர்ஸ் | W (3rd) | 7th | SF (2nd) | R (4th) | 8th | R (3rd) | 5th | SF (3rd) | W (2nd) | W (1st) | R (2nd) | CF (2nd) | |
சிட்னி தண்டர் | 8th | 8th | 8th | 7th | W (4th) | 8th | 6th | 6th | CF (5th) | KO (3rd) | KO (3rd) | EF (4th) |
குறிப்புகள் :
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.