பாப்பார்
மலேசியா, சபா, பாப்பார் மாவட்டத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
பாப்பார் என்பது (மலாய்: Pekan Papar; ஆங்கிலம்: Papar Town) மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, பாப்பார் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கடசான் - டூசுன்; புரூணை மலாய்க்காரர் (Bruneian Malay); பஜாவு ஆகிய இனக் குழுவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகரம்.
பாப்பார் நகரம் Papar Town | |
---|---|
ஆள்கூறுகள்: 5°44′00″N 115°56′00″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | மேற்கு கரை |
மாவட்டங்கள் | பாப்பார் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,24,420 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 89600 |
தொலைபேசி | +60(88) |
வாகனப் பதிவெண்கள் | SA (1980-2018) SY (2018-2023) SJ (2023-) SB |
இந்த நகரம் சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 38 கி.மீ. தெற்கே அமைந்து உள்ளது. இந்த நகரத்தில் ஓர் இரயில் நிலையம் உள்ளது. சபா மாநில இரயில் சேவையின் (Sabah State Railway) முக்கிய நிறுத்தங்களில் ஒன்றாக அந்த நிலையம் விளங்குகிறது.
இந்தப் பாப்பார் நகரம், குரோக்கர் மலைத்தொடரை (Crocker Range) நோக்கி, தாழ்வான கடலோரப் பகுதிகளால் சூழப்பட்டு உள்ளது.[1] இங்குள்ள தாழ்வு நிலப் பகுதிகள் நெல் சாகுபடிக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெல் சாகுபடியில் பெரும்பாலும் பழங்குடி மக்களே ஈடுபட்டு உள்ளனர்.