From Wikipedia, the free encyclopedia
பறையர் (Paraiyar) அல்லது பெறவா, சாம்பவர்[1] எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஓர் இனக்குழுவினர் ஆவர்.[2]
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பறையர் | |
---|---|
ஆதி திராவிடர் | |
மதராசு மாகாணத்தில் உள்ள பறையர்களின் குழு, 1909 | |
மதங்கள் | |
மொழிகள் | தமிழ் தெலுங்கு மலையாளம் |
நாடு | இந்தியா இலங்கை |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி |
இனம் | ஆதி திராவிடர் |
மக்கள் தொகை | 9,462,985 |
உட்பிரிவுகள் | மறையர், சாம்பான், சாம்பவர், கோலியர், வள்ளுவர்]] |
தொடர்புடைய குழுக்கள் | தமிழர் |
நிலை | பட்டியல் இனத்தவர்கள் |
பறையர், மறையர், சாம்பவர் என்பவர்கள், இந்தியாவில் வசிக்கும் ஒரு சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை மறையர், வள்ளுவர், ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.[சான்று தேவை]
2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி பறையர் மற்றும் ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 9,064,700 ஆகும், இது தமிழ்நாடு மக்கள் தொகையில் 12% ஆகும்.[3]
இச்சமூகக்குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். பறை என்பது பறை (இசைக்கருவி) அடித்து செய்தி கூறுவதைக் குறிக்கும். 21 ஆம் நூற்றாண்டில் (சில காலம் முன் வரை), இவர்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் பறையறிந்து செய்தி கூறிவந்தார்கள். மறை ஓதிய(பறைந்த)வர்கள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மேலும் பௌத்த தர்மத்தை பறைந்தவர்கள் என்பதாலே இப்பெயர் ஏற்பட்டது என்று அயோத்தி தாசர் குறிப்பிடுகின்றார். ஒப்பிடுக: பெறவா எனும் இலங்கையினர் பௌத்த கொள்கைகளை பின்பற்றுபவர்கள். சேர நாட்டில் (கேரளா) இன்று வரை பறை என்பது 'சொல்' என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது.
சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர்.
கிளய்டன் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் ("Eyivs") பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.
தஞ்சை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவர்.[4]
'ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதிமங்கலத்து தென்பிடாகை மணற்க்குடியிலிருக்கும் ஊர்ப்பறையன் மண்டை சோமனான ஏழிசைமோகப்படைச்சன் என்பவர் கோவில் ஒன்றிற்க்கு கொடை அளித்ததாக, தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண் 794 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் பறையர்கள் சதுர்வேதி மங்கலங்களில் குடியிருந்ததை அறிய முடிகின்றது.
பறையர் குடியிருப்பு, சேரி என்றும் காலனி என்றும் அழைக்கப்படுகின்றது. பொருளாதாரத்தில் கடுமையாக பின்தங்கிய பறையர்கள் வசிக்கும் சேரிகள் இன்று அவர்களின் பொருளாதார சூழலை பிரதிபலிப்பதால் இன்றை சூழலில் அச்சேரிகள் அழுக்கான என்ற பொருளுடைய Slum என்ற ஆங்கிலச்சொல்லோடு பொருத்திப் பார்க்கப்படுகின்றது. ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.[5] சோழர் கால கல்வெட்டானது பறைச்சேரியும் கம்மாணங்சேரியும் ஊரின் நடுபட்ட குளமும் புலத்திற்குளமுங்கரையும் இவ்வூர்திருவடிகள் என்று குறிப்பிடுகின்றது.[6] இதன் மூலம் கம்மாளர்கள் வாழ்ந்த கம்மாளஞ்சேரியும் பறைச்சேரியும் அருகருகே இருந்தன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆக சேரி என்பது தமிழர்கள் வாழும் பகுதிக்கான ஒரு பெயரேயாகும்.
வரலாற்றில் சிற்றரசர்களாக பறையர்கள் இருந்துள்ளனர்.[சான்று தேவை]
இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது.[7] சிலப்பதிகாரத்திலும் 'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்'[8] என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்று வரை கேரளாவில் பறையன் துள்ளல் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இருந்த அடங்காப்பதத்தில் நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் வில்லிகுலப்பறையர்கள் எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் எனவும், யாருக்கும் அடங்காதவர்களாக இருந்ததனால் அந்த பகுதிக்கு அடங்காப்பதம் என்று பெயர் வந்ததாகவும் வையாப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களை ஒடுக்க திடவீரசிங்கன் என்ற வன்னியர் வந்ததாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.[9]
சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது.[10]
நெசவு செய்த பறையர் வகுப்பினர் கோலியர்கள் ஆவார்கள்.[11] சிலர் விவசாயக்கூலிகளாகவும் இருந்தனர். இவர்கள் நெசவுப்பறையர்/கோலியப்பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை,சிவகங்கை போன்ற பகுதிகளில் மிகுதியாக காணப்படுகின்றனர், இவர்களுக்கென்று நாடு (territory) உள்ளது.உதாரணமாக பட்டுக்கோட்டை பகுதிகளில் "அம்புநாடு","வாராப்பூர்நாடு". சில நெசவுப்பறையருக்குச் சாம்பான் என்னும் பட்டப்பெயருண்டு. ஈசன் என்பதும் அவர்களின் பட்டப்பெயர்களுள் ஒன்று.திருமணக் காலங்களில் இவர்களின் பட்டப்பெயர் சொல்லப்படுதல் வேண்டும். மாப்பிள்ளையின் சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுவாள்[12].
கடம்பன், செவந்தான், குடியான், காலாடி, கோப்பாளி, சேவுகன், கருமாலி, தேவேந்திரன், வெறியன், வலங்கான், மோயன், சுக்கிரன், களவடையர், சாத்தன் போன்ற பல பட்டங்கள் உள்ளது. இது போல பட்டங்கள் பெயருக்கு பின்னாளும் திருமணத்தின் போது உறவு முறையை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர் என எட்கர் தர்ஸ்டன் தனது ஆய்வு நூலான South Indian Caste and Tribes (Vol 3, Page 302) இல் பதிவு செய்துள்ளார்[13]
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பறையர்களைப்பற்றிய நான்கு கல்வெட்டுக்கள் அவர்கள் சூத்திர ராயர்கள் என்று குறிப்பிடுகின்றது. அவற்றில் ஒன்று "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி" என்று குறிப்பிடுகின்றது. ஆக இக்கல்வெட்டுக்களின் மூலம் பரையர்கள் பிரம்ம சூத்திரம் உட்பட சூத்திரங்கள் அறிந்த சூத்திர ராயர்கள்[15] என்பதும் மேலும் இவர்கள் பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.[16][17][18][19]
தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பிராமண பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்கு சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும், அங்கு பறையன் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகின்றார்.[20] அயோத்தி தாச பண்டிதர் போன்றோர் சித்த மருத்துவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதது. இதன் மூலம் பறையர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.[21]
சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டளை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது.[22] இதன் மூலம் பரையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.
"வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்"[23] என்றும், "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" [24] என்றும், "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்"[25] என்றும் கோயம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
மடிவலை, வாளை வலை, சாளை வலை, சணவலை, போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும், அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும் வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்பனை செய்யும் வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர்.[26] [சான்று தேவை]
1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "CENSUS OF BRITISH INDIA" என்ற நூலில் "வேட்டுவ பறையன்", "திகிழு பறையன்", "மொகச பறையன்", "குடிமி பறையன்", "அத்வைத பறையன்" உட்பட "தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய" 84 பறையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது[27].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.