தென்காசி
From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய தென்காசி மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
தென்காசி (Tenkasi) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், தென்காசி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும்.
விரைவான உண்மைகள் தென்காசி, நாடு ...
தென்காசி | |
---|---|
ஆள்கூறுகள்: 8.956400°N 77.315200°E / 8.956400; 77.315200 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | தென்காசி நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | மருத்துவர். ராணி ஶ்ரீ குமார் |
• சட்டமன்ற உறுப்பினர் | எச். பழனி நாடார் |
• மாவட்ட ஆட்சியர் | A.K. கமல் கிஷோர், இ.ஆ.ப. |
ஏற்றம் | 184 m (604 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 70,545 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 627 811, 627 814, 627 808, 627 803, 627 804. |
தொலைபேசி குறியீடு | 04633 |
வாகனப் பதிவு | TN-76 |
சென்னையிலிருந்து தொலைவு | 626 கி.மீ (389 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 302 கி.மீ (188 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 160 கி.மீ (103 மைல்) |
நெல்லையிலிருந்து தொலைவு | 60 கி.மீ (37 மைல்) |
மூடு
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இந்நகரத்தில் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.