ஜி-20
நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கொண்ட குழு / From Wikipedia, the free encyclopedia
20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
கரும் நீலத்தில் உள்ள பகுதிகள் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள்; இளநீலத்தில் உள்ள பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள். | |
சுருக்கம் | ஜி-20 (G-21+) |
---|---|
உருவாக்கம் | 1998 |
நோக்கம் | உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி. |
உறுப்பினர்கள் | அர்கெந்தீனா ஆத்திரேலியா பிரேசில் சீனா பிரான்சு செருமனி இந்தியா இத்தாலி இந்தோனேசியா சப்பான் தென் கொரியா கனடா மெக்சிக்கோ உருசியா சவூதி அரேபியா துருக்கி ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியா தென்னாப்பிரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் |
ஜி-20 தலைமை | டோனி அபோட் (ஆத்திரேலியா) (2014) |
பணிக்குழாம் | எவருமில்லை |
வலைத்தளம் | http://www.g20.org/ |
அர்ச்சென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்த பொருளியல் கூட்டமைப்பு
கூட்டாக, ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% உம், உலக வணிகத்தில் 80% உம், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளது.[1] ஜி-20 அரசுத் தலைவர்கள் அல்லது நாட்டுத் தலைவர்கள் இதன் உச்சிமாநாடுகளில் கலந்து கொள்கின்றனர்.meetings 2017 jermany 2018 அர்ஜெண்டினா