சனவரி 26 (January 26) கிரிகோரியன் ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன.
- 1667 – என்றிக் சுவார்டெக்குரூன், டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் ஆளுநர், யாழ்ப்பாணம் கட்டளை அதிகாரி (இ. 1728)
- 1763 – காருல் யோவான், சுவீடன் நோர்வே அரசர் (இ. 1844)
- 1799 – பெனாய்ட் பால் எமிலி கிளாபிரான், பிரெஞ்சு இயற்பியலாளர், பொறியாளர் (இ. 1864)
- 1880 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்க இராணுவத் தளபதி (இ. 1964)
- 1892 – பெசி கோல்மன், அமெரிக்க விமானி (இ. 1926)
- 1917 – சி. டி. ராஜகாந்தம், தமிழக நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகை (இ. 1999)
- 1921 – சித்திரசேன, இலங்கை நடனக் கலைஞர் (இ. 2005)
- 1921 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர், சோனி நிறுவனர் (இ. 1999)
- 1924 – மணியம், தமிழக ஓவியர் (இ. 1968)
- 1937 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி (இ. 2012)
- 1944 – அஞ்செலா டேவிசு, அமெரிக்கச் செயற்பாட்டாளர்
- 1956 – பி. சி. ஸ்ரீராம், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- 1956 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)
- 1958 – எல்லேன் டிஜெனிரெஸ், அமெரிக்க நடிகை
- 1966 – அனிதா நாயர், ஆங்கிலப் புதின எழுத்தாளர், கவிஞர்
- 1968 – ரவி தேஜா, இந்திய நடிகர்
- 1986 – நவ்தீப், தெலுங்குத் திரைப்பட நடிகர்
- 1823 – எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், கண்டுபிடிப்பாளர் (பி. 1749)
- 1891 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர், உள் எரி பொறியைக் கண்டுபிடித்தவர் (பி. 1833)
- 1895 – ஆர்தர் கெய்லி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1825)
- 1903 – வில்லியம் ஸ்கீன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர் (பி. 1847)
- 1946 – அதிரியான் வான் மானன், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (பி. 1884)
- 1954 – எம். என். ராய், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், புரட்சியாளர் (பி. 1887)
- 1963 – நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், தமிழகத் தவில் கலைஞர் (பி. 1929)
- 1964 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (பி. 1886)
- 1990 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1895)
- 2008 – ஜோர்ஜ் அபாசு, பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
- 2010 – சாயி, இந்திய நடனக் கலைஞர்
- 2010 – ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1925)
- 2012 – பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி, புதுச்சேரி முதலமைச்சர் (பி. 1937)
- 2015 – ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)