Remove ads
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.[1] இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.[2]
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
குடியரசு நாள் | |
---|---|
2004ஆம் ஆண்டின் குடியரசு நாளில் மதராசு ரெசிமென்ட் படைவீரர்கள் அணிவகுத்துச் செல்லுதல் | |
கடைப்பிடிப்போர் | இந்தியா |
வகை | தேசிய நாள் |
கொண்டாட்டங்கள் | அணிவகுப்புகள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்றம் மற்றும் இனிப்புகள் வழங்கல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் |
நாள் | 26 சனவரி |
1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்[3]:
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.[3][4]
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
ஆண்டு | விருந்தினர் பெயர் | நாடு | குறிப்பு | ||
---|---|---|---|---|---|
1950 | அதிபர் சுகர்ணோ | இந்தோனேசியா | |||
1951 | — | ||||
1952 | — | ||||
1953 | — | ||||
1954 | மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக்[5] | பூட்டான் | |||
1955 | கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகம்மது [6] | பாக்கித்தான் | ராஜ்பத்தில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட முதல் விருந்தினர்[7] | ||
1956 | — | ||||
1957 | — | ||||
1958 | மார்ஷல் யெ ஜியாங்யிங்[8] | சீனா | |||
1959 | — | ||||
1960 | அரசுத்தலைவர் கிளெமென்ட் வொரொசிலோவ்[9] | சோவியத் ஒன்றியம் | |||
1961 | ஐக்கிய இராச்சியத்தின் அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்[10] | ஐக்கிய இராச்சியம் | |||
1962 | — | ||||
1963 | மன்னர் நொரடோம் சீயனூக்[11] | கம்போடியா | |||
1964 | — | ||||
1965 | உணவு,வேளாண் அமைச்சர் இராணா அப்துல் அமீது | பாக்கித்தான் | இரண்டாம் அழைப்பு | ||
1966 | — | ||||
1967 | — | ||||
1968 | பிரதமர் அலெக்சி கோசிகின் | சோவியத் ஒன்றியம் | இரண்டாம் அழைப்பு | ||
அரசுத்தலைவர் யோசிப் பிரோசு டிட்டோ[12] | யுகோசுலாவியா | ||||
1969 | பிரதம மந்திரி தொடோர் ஷிவ்கோவ்[13] | பல்கேரியா | |||
1970 | — | ||||
1971 | அதிபர் யூலியசு நெரெரெ[14] | தன்சானியா | |||
1972 | அதிபர் சீவூசாகர் ராம்கூலம் [15] | மொரிசியசு | |||
1973 | அதிபர் மொபுட்டு செசெ செக்கோ[16] | ||||
1974 | அரசுத்தலைவர் யோசிப் பிரோசு டிட்டோ | யுகோசுலாவியா | இரண்டாம் அழைப்பு | ||
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா[17] | இலங்கை | ||||
1975 | அதிபர் கென்னத் கவுண்டா[18] | சாம்பியா | |||
1976 | பிரதம மந்திரிஜாக் சிராக்[19] | பிரான்சு | |||
1977 | முதல் செயலாளர் எட்வர்டு கீரெக்[20] | போலந்து | |||
1978 | அதிபர் பாட்றிக்கு இல்லேரி[21] | அயர்லாந்து | |||
1979 | பிரதம மந்திரி மால்கம் பிரேசர்[22] | ஆத்திரேலியா | |||
1980 | அதிபர் வாலெரி கிசுக்கார்டு டி'எசுடைங் | பிரான்சு | |||
1981 | அதிபர் ஒசே லோபசு போர்டில்லோ[23] | மெக்சிக்கோ | |||
1982 | மன்னர் முதலாம் வான் கார்லோஸ்[24] | எசுப்பானியா | |||
1983 | அதிபர் செகூ சாகரி[25] | நைஜீரியா | |||
1984 | மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்[26] | பூட்டான் | 2வது அழைப்பு | ||
1985 | அதிபர் Raúl Alfonsín[27] | அர்கெந்தீனா | |||
1986 | பிரதம மந்திரி Andreas Papandreou[28] | கிரேக்க நாடு | |||
1987 | அதிபர் Alan Garcia[29] | பெரு | |||
1988 | சனாதிபதி ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா[30] | இலங்கை | இரண்டாம் அழைப்பு | ||
1989 | பொதுச்செயலாளர் Nguyen Van Linh[31] | வியட்நாம் | |||
1990 | பிரதம மந்திரி அனெரூட் ஜக்நாத்[32] | மொரிசியசு | இரண்டாம் அழைப்பு | ||
1991 | அதிபர் மாமூன் அப்துல் கயூம்[33] | மாலைத்தீவுகள் | |||
1992 | அதிபர் Mário Soares[33] | போர்த்துகல் | |||
1993 | பிரதமர் John Major[33] | ஐக்கிய இராச்சியம் | இரண்டாம் அழைப்பு | ||
1994 | பிரதமர் Goh Chok Tong[33] | சிங்கப்பூர் | |||
1995 | அதிபர் நெல்சன் மண்டேலா[34] | தென்னாப்பிரிக்கா | |||
1996 | அதிபர் Fernando Henrique Cardoso[35] | பிரேசில் | |||
1997 | பிரதமர் Basdeo Panday[35] | டிரினிடாட் மற்றும் டொபாகோ | |||
1998 | அதிபர் ஜாக் சிராக்[35] | பிரான்சு | மூன்றாம் அழைப்பு | ||
1999 | மன்னர் பிரேந்திரா[35] | நேபாளம் | |||
2000 | அதிபர் Olusegun Obasanjo[36] | நைஜீரியா | இரண்டாம் அழைப்பு | ||
2001 | அதிபர்Abdelaziz Bouteflika[36] | அல்ஜீரியா | |||
2002 | அதிபர் Cassam Uteem[36] | மொரிசியசு | மூன்றாம் அழைப்பு | ||
2003 | பிரதமர் Mohammed Khatami[36] | ஈரான் | |||
2004 | அதிபர் லுலா ட சில்வா [37] | பிரேசில் | இரண்டாம் அழைப்பு | ||
2005 | மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்[37] | பூட்டான் | மூன்றாம் அழைப்பு | ||
2006 | மன்னர் சவூதி அரேபியாவின் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அசீஸ்[37] | சவூதி அரேபியா | |||
2007 | அதிபர் விளாதிமிர் பூட்டின்[37] | உருசியா | மூன்றாம் அழைப்பு | ||
2008 | அதிபர் நிக்கொலா சார்கோசி[37] | பிரான்சு | 4வது அழைப்பு | ||
2009 | அதிபர் நுர்சுல்தான் நசர்பாயெவ்[37] | கசக்கஸ்தான் | |||
2010 | அதிபர் Lee Myung Bak[38] | தென் கொரியா | |||
2011 | அதிபர் சுசீலோ பாம்பாங் யுதயோனோ[39][40] | இந்தோனேசியா | இரண்டாம் அழைப்பு | ||
2012 | பிரதமர் யிங்லக் சினாவத்ரா[41] | தாய்லாந்து | |||
2013 | மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்[42] | பூட்டான் | நான்காம் அழைப்பு | ||
2014 | பிரதமர் சின்சோ அபே[43] | சப்பான் | |||
2015 | அதிபர் பராக் ஒபாமா | ஐக்கிய அமெரிக்கா | அழைக்கப்பட்ட முதல் அமெரிக்க அதிபர்.[44] | ||
2016 | பிரான்சிய அதிபர் பிரான்சுவா ஆலந்து | பிரான்சு | 5வது அழைப்பு[45][46] | ||
2017 | Crown Prince Mohammed bin Zayed Al Nahyan[47] | ஐக்கிய அரபு அமீரகம் | |||
2018 | Sultan ஹஸனல் போல்கியா | பகுரைன் | Ten guests (Heads of ASEAN states)[48] | ||
Prime Minister Hun Sen | கம்போடியா | இரண்டாம் அழைப்பு | |||
President ஜோக்கோ விடோடோ | இந்தோனேசியா | மூன்றாம் அழைப்பு | |||
Prime Minister Thongloun Sisoulith | லாவோஸ் | ||||
Prime Minister நஜீப் ரசாக் | மலேசியா | ||||
State Counsellor ஆங் சான் சூச்சி | மியான்மர் | ||||
President ரொட்ரிகோ துதெர்த்தெ | பிலிப்பீன்சு | ||||
Prime Minister லீ சியன் லூங் | சிங்கப்பூர் | இரண்டாம் அழைப்பு | |||
Prime Minister Prayuth Chan-ocha | தாய்லாந்து | இரண்டாம் அழைப்பு | |||
Prime Minister Nguyễn Xuân Phúc | வியட்நாம் | இரண்டாம் அழைப்பு | |||
2019 | President சிறில் ரமபோசா [49], [50] | தென்னாப்பிரிக்கா | இரண்டாம் அழைப்பு | ||
2020 | பிரேசில் அதிபர் ஜயர் போல்சனரோ | பிரேசில் | 1வது அழைப்பு[51] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.