நொரடோம் சீயனூக்

From Wikipedia, the free encyclopedia

நொரடோம் சீயனூக்


நொரடோம் சீயனூக் அல்லது நொரடோம் சிகானுக் (Norodom Sihanouk, (கெமர் மொழி: នរោត្តម សីហនុ; 31 அக்டோபர் 1922 - 15 அக்டோபர் 2012) கம்போடியாவின் முன்னாள் மன்னர் ஆவார். இவர் 1941 முதல் 1955 வரையும், பின்னர் 1993 முதல் 2004 வரையும் மன்னராகவிருந்தவர். 1953 முதல் 1970 வரை அந்நாட்டின் நிறைவேற்றுத் தலைவராகவும் இருந்தார். 2004 ஆம் ஆண்டில் இவர் முடி துறந்ததை அடுத்து கம்போடியாவின் மன்னர்-தந்தை (கெமர் மொழி: Preahmâhaviraksat) என அழைக்கப்பட்டார். இவருக்குப் பின்னர் இவரது மகன் நொரடோம் சிகாமொனி மன்னரானார்.

விரைவான உண்மைகள் நொரடோம் சீயனூக்Norodom Sihanouk នរោត្តម សីហនុ, கம்போடியாவின் மன்னர் (1ம் தவணை) ...
நொரடோம் சீயனூக்
Norodom Sihanouk
នរោត្តម សីហនុ
கம்போடியாவின் மன்னர் (1ம் தவணை)
ஆட்சிக்காலம்25 ஏப்ரல் 1941 – 2 மார்ச் 1955
முடிசூட்டுதல்செப்டம்பர் 1941
முன்னையவர்சிசோவத் மொனிவொங்
பின்னையவர்நொரிடோம் சுராமரித்
கம்போடியாவின் மன்னர் (2ம் தவணை)
ஆட்சிக்காலம்24 செப்டம்பர் 1993 – 7 அக்டோபர் 2004
முன்னையவர்சியா சிம்
பின்னையவர்நொரடோம் சிகாமொனி
பிறப்பு(1922-10-31)31 அக்டோபர் 1922
புனோம் பென், பிரெஞ்சு இந்தோசீனா
இறப்பு15 அக்டோபர் 2012(2012-10-15) (அகவை 89)
பெய்ஜிங், சீனா
துணைவர்நொரடோம் மொனினீத்
(12 ஏப்ரல் 1952 முதல்)
See list
  • பாட் கானோல்
    சிசோவத் பொங்சான்மொனி
    நொரடோம் தாவெட் நோர்லீக்
    சிசோவத் மொனிக்கேசன்
    மாம் மணிவண் பானிவொங்
குழந்தைகளின்
பெயர்கள்
14 பிள்ளைகள்
பெயர்கள்
பிரியா கருணா பிரியா பாட் சாம்தெக் பிரியா நொரடோம் சிகானூக் பிரியாமகாவீரக்சாத்
மரபுநொரடோம் மாளிகை
தந்தைநொரடோம் சுராமரித்
தாய்சிசோவத் கொசமாக்
மதம்பௌத்தம்
கையொப்பம்Thumb
மூடு
Thumb
Norodom Sihanouk (1983)
விரைவான உண்மைகள் நொரடோம் சிகானூக், கம்போடியாவின் முதல் பிரதமர் ...
நொரடோம் சிகானூக்
கம்போடியாவின் முதல் பிரதமர்
பதவியில்
18 மார்ச் 1945  13 ஆகத்து 1945
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்சொன் நுகொக் தான்
கம்போடியாவின் 12வது பிரதமர்
பதவியில்
28 ஏப்ரல் 1950  30 மே 1950
முன்னையவர்யெம் சாம்பர்
பின்னவர்சம்தெக் குரொம் லுவோங் சிசோவத் மொனிபொங்
கம்போடியாவின் 16வது பிரதமர்
பதவியில்
16 சூன் 1952  24 சனவரி 1953
முன்னையவர்ஊய் கந்தோல்
பின்னவர்பென் நூத்
கம்போடியாவின் 20வது பிரதமர்
பதவியில்
7 ஏப்ரல் 1954  18 ஏப்ரல் 1954
முன்னையவர்சான் நாக்
பின்னவர்பென் நூத்
கம்போடியாவின் 23வது பிரதமர்
பதவியில்
3 அக்டோபர் 1955  5 சனவரி 1956
முன்னையவர்லெங் உங்கெத்
பின்னவர்ஓம் சீங் சுன்
கம்போடியாவின் 25வது பிரதமர்
பதவியில்
1 மார்ச்சு 1956  24 மார்ச்சு 1956
முன்னையவர்ஓம் சீங் சுன்
பின்னவர்கிம் திட்
கம்போடியாவின் 27வது பிரதமர்
பதவியில்
15 செப்டம்பர் 1956  15 அக்டோபர் 1956
முன்னையவர்கிம் திட்
பின்னவர்சான் யுன்
கம்போடியாவின் 35வது பிரதமர்
பதவியில்
9 ஏப்ரல் 1957  7 சூலை 1957
முன்னையவர்சாம் யுன்
பின்னவர்சிம் வார்
கம்போடியாவின் 36வது பிரதமர்
பதவியில்
3 ஏப்ரல் 1960  19 ஏப்ரல் 1960
முன்னையவர்இவரே
பின்னவர்போ புரொயுங்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசாங்கும்
தொழில்அரசியல்வாதி
மூடு

சிகானுக் 1922 ஆம் ஆண்டில் அரசர் நொரடோம் சுராமரித், அரசி கொசாமக் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சாய்கோன் பிரெஞ்சுப் பாடசாலைகள், பின்னர் பாரிசிலும் கல்வி கற்றார். அப்போதைய பிரான்சின் நாட்சி அரசினால் 18வது அகவையில் கம்போடியாவின் மன்னராக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்ததை அடுத்து பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடினார். 1953 இல் விடுதலை கிடைத்தது. அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து லொன் நொல் கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை அடுத்து சிகானூக் சீனாவில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.

1975 ஆம் ஆண்டில் கெமர் ரூச் கம்போடியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சீயனூக் நாடு திரும்பினார். ஆனாலும், அவர் அரண்மனையில் கெமர் ரூச் ஆட்சியாளர்களால் அவர்களின் நான்காண்டு ஆட்சிக் காலம் முழுவதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.[1]

வியட்நாமியப் படையினர் கெமர் ரூச் ஆட்சியாளரைத் தோற்கடித்ததை அடுத்து சீயனூக் மீண்டும் சீனா சென்றார். கம்போடியா உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட அந்தப் 13 ஆண்டு காலம் சிகானூக் சீனாவில் தங்கியிருந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் பேரில், வியட்நாம் படைகள் 1991 இல் கம்போடியாவில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து சீயனூக் 1993 இல் நாடு திரும்பி மீண்டும் மன்னராக முடி சூடிக் கொண்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.