சிகாம்புட் கொமுட்டர் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சிகாம்புட் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Segambut Commuter Station மலாய்: Stesen Komuter Segambut); சீனம்: 泗岩末) என்பது மலேசியா, கோலாலம்பூர், பெட்டாலிங் மாவட்டம், சிகாம்புட் நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-இல் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு மின்மயமாக்கப்பட்டது.[1][2]
KA05 | |||||||||||
சிகாம்புட் கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
வேறு பெயர்கள் | சீன மொழி: 泗岩沫 | ||||||||||
அமைவிடம் | 52000, சிகாம்புட், கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°11′11″N 101°39′51″E | ||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||
தடங்கள் | கிள்ளான் துறைமுக வழித்தடம் கேடிஎம் கொமுட்டர் | ||||||||||
நடைமேடை | 2 நடை மேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KA05 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1892 | ||||||||||
மறுநிர்மாணம் | 1995 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
இந்த நிலையம் சிகாம்புட் நகரின் மையப் பகுதியில், தாமான் சேசாத்திரா (Taman Sejahtera) எனும் வீட்டுமனைப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கெப்போங் நகரத்தின் பெயர் இந்த கொமுட்டர் நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் மிகப் பழைமையான தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன், 1990-ஆம் ஆண்டுகளில் ஈயமண் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தொடருந்து நிலையங்களில் இந்த நிலையமும் வரலாறு படைக்கின்றது.[3]
சிகாம்புட் கொமுட்டர் நிலையம், சிகாம்புட் புறநகர் பகுதியில் அதிகரித்து வந்த போக்குவரத்தை நிவர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது. கெப்போங் புறநகர் பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலையம்; கெப்போங் கொமுட்டர் நிலையம்; மற்றும் கெப்போங் சென்ட்ரல் நிலையங்களுக்குச் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2006-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திறக்கப்பட்ட கேடிஎம் கொமுட்டர் சேவைக்கு இந்த நிலையம் புதிய கூடுதல் சேவையை வழங்குகிறது.[4]
2018 சூன் முதல், கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் மேம்படுத்தல் பணிகளின் விளைவாக, இந்த நிலையத்திற்கான சேவைகள்; தஞ்சோங் மாலிம் - கெப்போங் சேவை; கிள்ளான் துறைமுகம் - சிகாம்புட் சேவை என இரு சேவைகளாகக் குறைக்கப்பட்டது.[5]
கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் மேம்படுத்தல் காரணமாக சிகாம்புட் நிலையத்தில் ஒரு நாளைக்கு 13 முறை மட்டுமே தொடருந்துகள் நின்று சென்றன. மேம்படுத்தல் வேலைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என அறியப்படுகிறது.
2015-ஆம் ஆண்டில் இருந்து, சிகாம்புட் நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[6]
சிகாம்புட் கொமுட்டர் நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[7]
சிகாம்புட் கொமுட்டர் நிலையம், சிகாம்புட் நகரத்திற்கும், அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் மற்றும் சிகாம்புட் நகரத்திற்கு அருகிலுள்ள புறநகர் வீடுமனைப் பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. சிகாம்புட் நகருக்கான இந்தப் புதிய தொடருந்து நிலையம் 1995-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் சிகாம்புட் நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.