From Wikipedia, the free encyclopedia
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அல்லது கிள்ளான் துறைமுக வழித்தடம் (ஆங்கிலம்: Tanjung Malim–Port Klang Line அல்லது Port Klang Line; மலாய்: Laluan Pelabuhan Klang அல்லது Laluan Tanjung Malim–Pelabuhan Klang) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.[1][2]
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் Port Klang Line | |||
---|---|---|---|
கோலாலம்பூர் சென்ட்ரல் KTM 92 SCS 14 ரக இரயில் | |||
கண்ணோட்டம் | |||
நிலை | செயலில் உள்ளது | ||
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
வழித்தட எண் | (சிவப்பு) | ||
வட்டாரம் | பேராக் சிலாங்கூர் கோலாலம்பூர் | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 34 நிலையங்கள் | ||
இணையதளம் | www | ||
சேவை | |||
அமைப்பு | கேடிஎம் பயணிகள் KTM Komuter | ||
சேவைகள் | தஞ்சோங் மாலிம் — கிள்ளான் துறைமுகம் | ||
பாதை எண் | 1 | ||
செய்குநர்(கள்) | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
பணிமனை(கள்) | சிரம்பான் | ||
சுழலிருப்பு | 37 தொடருந்துகள் (KTM Class 92 Komuter CSR EMU) | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 14 ஆகத்து 1995 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 126 km (78 mi) | ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்மயமாக்கல் | வார்ப்புரு:25 kV 50 Hz | ||
இயக்க வேகம் | ++ 120 km/h (75 mph) | ||
|
இந்தச் வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. கிள்ளான் துறைமுகம்; தஞ்சோங் மாலிம் ஆகிய இரு நகரங்களையும்; இந்த இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள 35 தொடருந்து நிலையங்களையும் இந்தச் சேவை இணைக்கின்றது.[3]
இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் கோலாலம்பூர் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன. 15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை பத்துமலை வரை இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) என்பது 1995-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்மயமாக்கப்பட்ட பயணிகள் இரயில் சேவையாகும் (Klang Valley Integrated Transit System). குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள பயணிகளுக்குப் பெரிதும் உதவியது.
கோலாலம்பூரில் பணிபுரியும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாநகரத்திற்குச் செல்ல முடியும் என்பதால், இது ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாக இருந்தது. பெட்டிகள் நவீனமாகவும் மற்றும் குளிரூட்டப் பட்டவையாகவும் இருந்தன.
1886-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட சிலாங்கூர் அரசாங்க இரயில் பாதையின் ஒரு பகுதியாக இந்தப் பாதை தொடங்கியது. நவீன கால சிரம்பான் பாதையானது 1895-இல் திறக்கப்பட்டது.[4]
கோலாலம்பூர் - கிள்ளான் இரயில் பாதையில் இருந்து சுல்தான் சாலை நிலையம் வழியாக, 1895-இல் சிரம்பானுக்குத் திறக்கப்பட்டது.[5]
1990-களின் முற்பகுதியில் ரவாங் - சிரம்பான் சேவையும்; செந்தூல் - கிள்ளான் துறைமுகச் சேவையும் மின்மயமாக்கப் பட்டன.
தஞ்சோங் மாலிம் - கிள்ளான் துறைமுகம் ஆகிய நகரங்களுக்கு இடையில் எந்தெந்த நிலையங்களில் கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter) தொடருந்துகள் நின்று செல்கின்றன எனும் விவரங்கள்:
நிலையக் குறியீடு | நிலையத்தின் பெயர் |
KA15 | தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம் |
KA14 | கோலா குபு பாரு தொடருந்து நிலையம் |
KA13 | ராசா கொமுட்டர் நிலையம் |
KA12 | பத்தாங்காலி கொமுட்டர் நிலையம் |
KA11 | செரண்டா கொமுட்டர் நிலையம் |
KA10 | ரவாங் தொடருந்து நிலையம் |
KA09 | குவாங் கொமுட்டர் நிலையம் |
KA08 | சுங்கை பூலோ தொடருந்து நிலையம் |
KA07 | கெப்போங் சென்ட்ரல் கொமுட்டர் நிலையம் |
KA06 | கெப்போங் கொமுட்டர் நிலையம் |
KA05 | சிகாம்புட் கொமுட்டர் நிலையம் |
KA04 | புத்ரா கொமுட்டர் நிலையம் |
KA03 | பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம் |
KA02 | கோலாலம்பூர் தொடருந்து நிலையம் |
KA01 KS01 | கோலாலம்பூர் சென்ட்ரல் |
KD01 | அப்துல்லா அக்கிம் நிலையம் |
KD02 | அங்காசாபுரி கொமுட்டர் நிலையம் |
KD03 | பந்தாய் டாலாம் கொமுட்டர் நிலையம் |
KD04 | பெட்டாலிங் கொமுட்டர் நிலையம் |
KD05 | ஜாலான் டெம்பளர் கொமுட்டர் நிலையம் |
KD06 | கம்போங் டத்தோ அருண் கொமுட்டர் நிலையம்n |
KD07 | செரி செத்தியா கொமுட்டர் நிலையம் |
KD08 | செத்தியா ஜெயா கொமுட்டர் நிலையம் |
KD09 KS02 | சுபாங் ஜெயா கொமுட்டர் நிலையம் |
KD10 | பத்து தீகா கொமுட்டர் நிலையம் |
KD11 | சா ஆலாம் கொமுட்டர் நிலையம் |
KD12 | பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம் |
KD13 | புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம் |
KD14 | கிள்ளான் கொமுட்டர் நிலையம் |
KD15 | தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் |
KD16 | தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் |
KD17 | கம்போங் ராஜா ஊடா கொமுட்டர் நிலையம் |
KD18 | ஜாலான் காசுதாம் கொமுட்டர் நிலையம் |
KD19 | கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.