ச. சாமிவேலு
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சாமிவேலு சங்கிலிமுத்து (S. Samy Vellu; 8 மார்ச் 1936 – 15 செப்டம்பர் 2022) மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர். இவர் 1979-ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை ம.இ.கா.வின் தலைவர் பதவியில் சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராகப் பதவி வகித்தவர். இவர் 2022 செப்டம்பர் 15 இல் கோலாலம்பூரில் தனது 88-ஆவது அகவையில் மூப்பின் காரணமாகக் காலமானார்.
விரைவான உண்மைகள் யாங் அமத் பெர்பாகியா துன்எஸ். சாமிவேலுS. Samy Vellu, பொதுப்பணித்துறை அமைச்சர்]] ...
எஸ். சாமிவேலு S. Samy Vellu | |
---|---|
![]() 2004 இல் சாமிவேலு | |
பொதுப்பணித்துறை அமைச்சர்]] | |
பதவியில் 8 மே 1995 – 18 மார்ச் 2008 | |
ஆட்சியாளர்கள் | யாஃபர், சலாகுதீன், சிராச்சுதீன், மிசான் சைனல் ஆபிதீன் |
பிரதமர் | மகாதீர் பின் முகமது அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | லியோ இரோக் |
பின்னவர் | மொகுத் சின் முகமது |
தொகுதி | சுங்கை சிப்புத் |
பதவியில் 15 செப்டம்பர் 1979 – 15 சூன் 1989 | |
ஆட்சியாளர்கள் | அகமது சா இசுக்காந்தர் அசுலான் சா |
பிரதமர் | உசேன் ஓன் மகாதீர் பின் முகமது |
முன்னையவர் | லீ சான் சூன் |
பின்னவர் | லியோ மொகி இரோக் |
தொகுதி | சுங்கை சிப்புத் |
எரிசக்தி, இயற்கை வள அமைச்சர் | |
பதவியில் 15 சூன் 1989 – 7 மே 1995 | |
ஆட்சியாளர்கள் | அசுலான் சா யாஃபர் |
பிரதமர் | மகாதீர் பின் முகமது |
முன்னையவர் | லியோ மொகி இரோக் |
பின்னவர் | லியோ மொகி இரோக் |
தொகுதி | சுங்கை சிப்புத் |
மலேசிய இந்திய காங்கிரசின் 7-ஆவது தலைவர் | |
பதவியில் 12 அக்டோபர் 1979 – 6 திசம்பர் 2010 | |
முன்னையவர் | வி. மாணிக்கவாசகம் |
பின்னவர் | கோவிந்தசாமி பழனிவேல் |
மலேசிய நாடாளுமன்றம் for சுங்கை சிப்புத் | |
பதவியில் 16 செப்டம்பர் 1974 – 8 மார்ச் 2008 | |
முன்னையவர் | வீ. தி. சம்பந்தன் (ம.இ.கா) |
பின்னவர் | ஜெயக்குமார் தேவராஜ் (ம.ச.க) |
பெரும்பான்மை | 644 (1974) 5,141 (1978) 7,897 (1982) 4,436 (1986) 1,763 (1990) 15,610 (1995) 5,259 (1999) 10,349 (2004) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாமிவேலு சங்கிலிமுத்து (1936-03-08)8 மார்ச்சு 1936 குளுவாங், ஜொகூர், மலாயா) |
இறப்பு | 15 செப்டம்பர் 2022(2022-09-15) (அகவை 86) கோலாலம்பூர், மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | மலேசிய இந்திய காங்கிரசு (ம.இ.கா) |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய முன்னணி (மலேசியா) (தே.மு) பெரிக்காத்தான் நேசனல் (பெ.நே) |
துணைவர் | இந்திராணி சாமிவேலு |
பிள்ளைகள் | 1 |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | கட்டடக் கலைஞர் |
மூடு
நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் சேவை செய்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.[1]
சாமிவேலு 1963-இல் இருந்து மலேசிய வானொலி, மலேசியத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர்.