![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Koshi_districts.png/640px-Koshi_districts.png&w=640&q=50)
கோசி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
கோசி மண்டலம் (Koshi) (நேபாளி: कोशी अञ्चलகேட்கⓘ) நேபாளத்தின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். நேபாளத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடமான விராட்நகர் பெரிய நகரம் ஆகும். இம்மண்டலத்தின் பிற நகரங்கள் இனரூவா, தரண், தன்குட்டா, இடாஹரி ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Koshi_districts.png/640px-Koshi_districts.png)
கோசி மண்டலத்தின் முக்கிய ஆறுகள் அருண் ஆறு, தாமர் ஆறு மற்றும் சப்த கோசி ஆறுகள் ஆகும். கோசி மண்டலத்தில் போஜ்பூர் மாவட்டம், தன்குட்டா மாவட்டம், மொரங் மாவட்டம், சங்குவாசபா மாவட்டம், சுன்சரி மாவட்டம் மற்றும் தேஹ்ரதும் மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.