சங்குவாசபா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சங்குவாசபா மாவட்டம் (Sankhuwasabha District) (நேபாளி: सङ्खुवासभा जिल्ला Listenⓘ) நேபாள மாநில எண் 1-இல் [1]அமைந்த 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில் கோசி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காத்பாரி நகரம் ஆகும். [2]
இதன் பரப்பளவு 3,480 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,58,742 ஆகும். இம்மாவட்டத்தில் செயின்புர் மற்றும் மடி எனும் இரண்டு நகராட்சிகள் உள்ளது.
இதன் எல்லைப்புற மாவட்டங்களாக போஜ்பூர் மாவட்டம், தேஹ்ரதும் மாவட்டம், தாப்லேஜுங் மாவட்டம், சோலுகும்பு மாவட்டம் மற்றும் வடக்கே சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தின் டிங்கிரி நகரம் அமைந்துள்ளது.
உள்ளூர் பழங்குடிகளான குமால், யக்கா, குலூங், ராய், குரூங், லிம்பு, நேவா மக்கள் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் ஏலக்காய் விளைச்சல் நன்கு உள்ளது. அருண் ஆறு இம்மாவட்டத்தின் குறுக்கே பாய்கிறது.